தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராமேசுவரம் பகுதியில் பதட்டம் நீடிப்பு: 100 பேர் மீது வழக்கு

Go down

ராமேசுவரம் பகுதியில் பதட்டம் நீடிப்பு: 100 பேர் மீது வழக்கு Empty ராமேசுவரம் பகுதியில் பதட்டம் நீடிப்பு: 100 பேர் மீது வழக்கு

Post  meenu Mon Apr 01, 2013 2:25 pm


ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் சந்தியாகப்பர் ஆலயம் அருகே கிரிக்கெட் விளையாட்டில் இருதரப்பினர் மோதிக் கொண்ட விவகாரம், கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால், போலீசார் விரைந்து சென்றனர். போலீஸ் துணை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் போலீசார் செல்வதற்குள் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதலில் இறங்கினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் தாக்கப்பட்ட தரப்பை சேர்ந்த பெண்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அகற்ற முயன்றபோது, அங்கு திரண்டு வந்த மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ், ராஜபாளையம் பட்டாலியனை சேர்ந்த போலீஸ்காரர்கள் கோகுல கிருஷ்ணன், காத்தணன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வன்முறை கும்பலை கலைக்க, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த கும்பல் சிதறி ஓடியது. இதற்கிடையில் கலவரம் குறித்த தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், துணை சூப்பிரண்டு முரளீதரன் தலைமையில் கூடுதல் போலீசார் தங்கச்சிமடம் பகுதிக்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பதற்றத்தை தணிக்க போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கத்தியுடன் திரிந்த வாலிபர் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

இருதரப்பினர் மோதலில் பலர் காயம் அடைந்திருக்கக்கூடும் என கருதப்படும் நிலையில், அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமேசுவரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் மீதான தாக்குதல் கோஷ்டி மோதலாக மாறியது. தற்போது மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டு இருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கலவரம் தொடர்பாக ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் 'மாலைமலர்' நிருபரிடம் கூறியதாவது:-

தங்கச்சிமடத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது போலீஸ் படை தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஒரு பட்டாலியன் போலீஸ், அதிவிரைவுப் படையினர் பதற்றமான பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். கலவர தடுப்பு வாகனமான “வஜ்ரா” தயார் நிலையில் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊரின் முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளனள.

தங்கச்சிமடம் பகுதி, ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கார் உடைப்பு: அஜீத் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு
» நைஜீரியா: திவிரவாதிகள் பதுங்குமிடம் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு
» அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு: மேலும் 3 பேர் கைது
» பூவை மேய்ந்த ஆடு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum