மெரீனா பட விவகாரம்- பாண்டிராஜ் மீது மீண்டும் வழக்கு!
Page 1 of 1

சென்னை: மெரீனா படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடக் கூடாது என அதன் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பாலமுருகன் வழக்கு தொடர்வதாக அறிவித்துள்ளார்.
மெரினா படத்தை பாண்டிராஜுடன் இணைந்து தயாரித்தவர் பாலமுருகன். ஆனால் படம் வெளியாகும் நேரத்தில் பாண்டிராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி முன்னிலையில் சமாதானம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பாண்டிராஜ், பாலமுருகனுக்கு சேர வேண்டிய லாபத்தை கொடுத்துவிடுவதாகவும், பாலமுருகன் அனுமதியின்றி வேறு மொழிகளில் படத்தை டப் செய்ய மாட்டேன் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கும் விஜய் டிவிக்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் ‘மெரினா’ படத்டை வரும் 14ஆம் தேதி தெலுங்கில் டப் செய்து வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
நீதிமன்றத் தடையை மீறிய செயல் இது என்று கூறி பாண்டிராஜ் மீது கிரிமினல் வழக்குத் தொடரப் போவதாக பாலமுருகன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி பாலமுருகன் கூறுகையில், “எந்த ஒழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் இல்லாமல் பாண்டிராஜை நம்பி ரூ 50 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றப் பார்த்தார். நீதிமன்றம் தலையிட்டதின் பேரில் எனக்கு பாண்டிராஜ் ரூ.15 லட்சம் கொடுத்தார்.
மேலும் மெரினா படத்தை என்னுடைய அனுமதி இன்றி வேறு எந்த மொழிகளிலும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாண்டிராஜ் அந்த உத்தரவை மதிக்காமல் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார். எனவேதான் அவர் மீதும், படத்தை என் அனுமதியில்லாமல் வெளியிடுவோர் மீதும் வழக்கு தொடர்கிறேன்,” என்றார்.
இதுகுறித்து பாண்டிராஜ் நம்மிடம் கூறுகையில், “பாலமுருகன் ரூ 50 லட்சம் முதலீடு செய்ததாகக் கூறுவதே தவறு. அவர் போட்டு முதலுக்கு வட்டியோடு சேர்த்துக் கொடுத்துவிட்டேன். மேலும் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த அத்தனை வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டுவிட்டன. இனி சட்டரீதியாக அவரால் எதுவும் செய்ய முடியாது,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» 'லட்டுதின்ன ஆசையா?' பட கதை விவகாரம்: ஐகோர்ட்டில் கே.பாக்யராஜ் வழக்கு
» நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!
» தமன்னா மீது வழக்கு! இந்திப்பட தயாரிப்பாளர் மிரட்டல்!!
» வைகைப் புயல் மீது வழக்கு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum