‘நினைத்தாலே இனிக்கும்’: கேட்க கேட்க ருசித்த பாடல்கள்!
Page 1 of 1

காலத்தால் அழியாத பழைய பாடல்கள் என்றைக்கு கேட்டாலும் புதிதாகவே இருக்கும். ஜெயா டிவியில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஒளிபரப்பான ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல 50க்கும் மேற்பட்ட மனதை மயக்கும் பாடல்களை செவி குளிர கேட்க முடிந்தது.
ஜெயா டிவி 14 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பிரபல இசையமைப்பாளர்களான இசை இரட்டையர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு விழா எடுத்து கவுரவப்படுத்தினார்கள். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் `நினைத்தாலே இனிக்கும்’ என்ற தலைப்பில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். இந்த மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி கவுரவிக்கப் பட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் ஜெயா டிவி சார்பில் நடைபெற்ற சர்வேயில் இசைச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெரும்பாலான மக்கள் வழங்கியிருந்தனர். இந்த பட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
‘நினைத்தாலே இனிக்கும்’ மெல்லிசைக் கச்சேரியில் பாடப்பட்டவை அனைத்தும் செவிகளைக் குளிரவைக்கும் பாடல்களாக இருந்தன.
விழா நாயகன் எம்.எஸ்.வி. புல்லாங்குழல் கொடுத்த பாடல்களே… என்ற பாடலை பாடி நிகழ்ச்சியைத் துவங்கினார். ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’…. பாடலை அதே இனிமை மாறாமல் வாணிஜெயராம் பாடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். இந்த நிகழ்ச்சியை பாடகி சின்மயி, சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றிய சக கலைஞர்கள், நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தமிழ் திரை உலகின் பல முன்னணி திரைப்பட நட்சத்திரங்களும் முன்னணி இயக்குனர்களும், பிரபலங்களும் பங்கேற்றனர். பழங்கால நடிகர், நடிகையர்கள் பங்கேற்று தங்களின் மலரும் நினைவுகளை பேசினார்கள்.
இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகையர்களின் குத்தாட்டம் எதுவும் இல்லாமல் இன்னிசை கச்சேரியோடு முடிந்த நிகழ்ச்சி இதுவாகத்தான் இருந்திருக்கும்.
அமுதகானமாய் ஒலித்த மெல்லிசைப் பாடல்களின் நினைவுகளோடு அன்றைய தினம் கழிந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நினைத்தாலே இனிக்கும்..மனகோலம்
» மீண்டும் “நினைத்தாலே இனிக்கும்”!?
» 2013 ஜனவரியில் கமல், ரஜினியின் நினைத்தாலே இனிக்கும்
» புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் ‘நினைத்தாலே இனிக்கும்’…!
» நினைத்தாலே இனிக்கும்… அடுத்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வியும் களமிறங்குகிறார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum