உடுப்பி கிருஷ்ணர் கோயில்
Page 1 of 1
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இக்கோவில் உள்ளது. இதில் கிருஷ்ணர் மூலவராக உள்ளார். இத்தலத்தில் சித்திரை அட்சயதிரிதியையிலிருந்து வைகாசி பவுர்ணமி வரை வசந்த உற்சவம், ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, மகாசிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, மார்கழி மாதம் முழுவதும் பூஜை, இங்கு நடத்தப்படும் திருவிழாக்களிலேயே பிப்ரவரியில் நடத்தப்படும் "மத்வநவமி' திருவிழா தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இச்சன்னதி காலை 4.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இங்கு காலை 4.30 - 5 மணிக்குள் நடத்தப்படும் நிர்மால்ய பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ள இக்கோயிலில் கிருஷ்ணர் மேற்கு பார்த்து அருளுகிறார்.
மேற்கு பார்த்த கிருஷ்ணரை தரிசிப்பது மிகவும் விசேஷம். கோயிலின் கிழக்கே மத்வாச்சாரியார் உண்டாக்கிய தீர்த்தக்குளம் உள்ளது. இது "மத்வ புஷ்கரிணி' எனப்படுகிறது. அதன் நடுவில் கருங்கல் மண்டபம் உள்ளது. கோயிலுக்குள் சிவனுக்கு தனி சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளது. பிரகாரத்தின் கடைசியில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார்.
மதியமும், இரவும் அன்னதானம் நடக்கிறது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக 27 நட்சத்திரங் களுடன் இத்தல கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான். எனவே இங்குள்ள கிருஷ்ணன் நட்சத்திரங்களின் தலைவனாகவும், கிரகங்களின் நாயகனாகவும் கருதப்படுகிறார்.
கிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும். வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை "நவக்கிரக துவாரம்` என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் முன்புள்ள மண்டபம் தீர்த்த மண்டபம் எனப்படுகிறது. இங்கு தான் தினமும் இரவு சாமர பூஜை, மண்டல பூஜை நடக்கிறது.*
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடுப்பி கிருஷ்ணர் கோயில்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் போல குழந்தை
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் போல குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum