தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீரங்கம் கோவில்

Go down

ஸ்ரீரங்கம் கோவில் Empty ஸ்ரீரங்கம் கோவில்

Post  meenu Mon Apr 01, 2013 11:35 am


ஆறு இரண்டாக பிரியும் இடத்திலுள்ள தீவு போன்ற பகுதியையோ அல்லது அருகருகே செல்லும் இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பையோ அரங்கம் என்று கூறுவார்கள். இந்த அடிப்படையில் காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் அமைந்த கோவில் தான் திருவரங்கம் என்னும் பெயர் கொண்ட ஸ்ரீரங்கம்.

ஸ்ரீரங்கம் கோவில்........... ஸ்ரீரங்கம் கோவிலானது, பூலோக வைகுண்டமாகவும், வைணவர்களின் முதல் கோவிலாகவும் நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதலாவதாகவும் விளங்குகின்றது. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலைப் பற்றி நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 247 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீரங்க அரங்கநாதர் கோவிலுக்கு வடக்கு திசையில் திருவானைக்கா எனப்படும், திருவானைக்கோவில் சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலத்தில் அகிலாண்டேஸ்வரி சமேதராக ஜம்புகேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வெண்நாவல் மரத்தின் கீழ் லிங்கமாக தோன்றியதால் இறைவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

ஜம்பு என்பது வடமொழியில் வெண்நாவல் மரத்தை குறிப்பதாகும். ஒரு முறை அகிலாண்டேஸ்வரி தன்னுடைய பூஜைக்காக ஒரு லிங்கத்தை வடித்தார். அது நீராய் மாறியதால் இந்த ஆலயத்தை பஞ்சபூத தலங்களில் அப்பு (நீர்) தலமாக போற்றி வழிபடுகின்றனர்.

வடரங்கம்....... ஹரியும், ஹரனும் தனித்தனி பிரம்மாண்ட ஆலயங்களில் அருள்பாலிக்கும் இந்த காட்சியை ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் தென் கரையிலும் காண முடிந்தால் அது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகத்தானே அமையும். ஆம்! சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள வடரங்கம் தான் இத்தகைய சிறப்பான தலமாகும்.

வடரங்கத்திலும் அரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் அருளாட்சி புரிந்து வருகிறார். அந்த கோவிலின் அருகில் ஸ்ரீரங்கத்தின் அருகில் உள்ள திருவானைக்கா சிவாலயம் போன்று சிவன், ஜம்புகேஸ்வரர் என்ற நாமத்துடன் அரசாட்சி புரிந்து வருகிறார். ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்த இந்த தலங்கள் இயற்கையாக அமைந்ததா? அல்லது இறைவன் மேல் பற்றுள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? என்பது இன்றளவும் அறியப்படாதது.

வசிஷ்ட மகரிஷி........ வட என்பதற்கு சமஸ்கிருதத்தில் ஆலமரம் என்று பொருள். கிருதாயுகத்தில் ஒரு யோசனை தூரத்திற்கு புன்னை வனமும், திரேதாயுகத்தில் அரை யோசனை தூரத்திற்கு துளசி வனமும், துவாபரயுகத்தில் கால் யோசனை தூரத்திற்கு வகுளாரண்யமும், கலியுகத்தில் அரை குரோச தூரத்திற்கு வடவாரண்யம் என்ற பெயரில் ஆல மரமும் அமையப்பெற்றிருந்ததாக அறியப்படுகிறது.

பள்ளிகொண்ட பெருமாள், இங்கு கோவில் கொண்டதால் இந்த தலம் வடரங்கம் என்றானது. மேற்கில் இருந்து கிழக்காக ஓடும் கொள்ளிடம் ஆறு, இவ்வூரில் வடக்கு தெற்காக திரும்பி உத்தரவாஹினி என்ற பெயரில் காட்சி தருவது சிறப்பானது. புத்திரனை இழந்த வசிஷ்ட மகரிஷி, அவனுக்கான கர்ம கடமைகளை காசியில் முடித்து விட்டு சேது சமுத்திரக்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.

வெள்ளத்தால் அழிவு......... வழியில் உத்தரவாஹினியில் நீராடி முடிந்த போது இடி, மின்னலுடன் மழை பிடித்துக் கொண்டது. பயணம் தடைபட்டதால் வசிஷ்ட மனவேதனை அடைந்தார். அவர் விஷ்ணுவிடம் மானசீகமாக முறையிட்டார். அப்போது மகாவிஷ்ணு அவருக்கு நேரில் தோன்றி அருள்புரிந்தார்.

விஷ்ணு காட்சியளித்த இடம் கொள்ளிடத்திற்கும், மேற்கு ராஜ ராஜன் வாய்க்காலுக்கும் இடைப்பட்ட அரங்கப் பகுதி என்பதால் இது வடரங்கமாயிற்று. இந்த இடத்தில் வசிஷ்டர், விஸ்வகர்மா என்னும் தேவதச்சனை வைத்து அரங்கநாதருக்கு கோவில் எழுப்பச் செய்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், இயற்கையால் ஆட்கொள்ளப்பட்ட இறைவனையும், தேரையும் அடித்துச் சென்று விட்டது.

ராமர் ஆலயம் மட்டும் எஞ்சி நின்றது. ஆற்றில் வெள்ளம் வடிந்த பின்னர் அரங்கநாதரையும், ரங்க நாயகியையும் தேடிப்பிடித்து கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு கீழ்புறம் உள்ள மற்றொரு கோவிலின் வளாகத்தில் ஸ்தாபனம் செய்தனர்.

இடம் கொடுத்த சிவபெருமான்........... அரங்கநாதர் தெற்கு நோக்கி பாலசயனக் கோலத்திலும், அவர் பின்புறத்தில் சக்கரத்தாழ்வாரும், அவரது வலதுபுறத்தின் மகாமண்டபத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணரும், இடது புறத்தில் காலடியை தொடும் விதமாக ஆஞ்சநேயரும் சன்னதி கொண்டுள்ளனர்.

ரங்கநாயகி தாயார் நின்ற கோலத்தில் தனிச் சன்னதியிலும், பெருமாளுக்கு எதிரில் ஆலயத்தின் வெளிப்புறத்தில் கருடாழ்வாரும் அருள்பாலிக்கின்றனர். வெள்ளத்தில் இருந்து மீட்டு ரங்கநாதனை பிரதிஷ்டை செய்ய இடமளித்தது வேறுயாரும் இல்லை. ஈசனேதான். அவரது கோவில் அமைந்த இடத்தில் தான் அரங்கநாதரும் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளார்.

திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரராக அருள் பாலிக்கும் ஈசன் அதே பெயரில் வடரங்கத்தில் கோவில் கொண்டுள்ளார். மற்றொரு ஆச்சரியம் இந்த சிவாலயத்தில் உள்ள இறைவியின் பெயரும் அகிலாண்டேஸ்வரி என்பது தான். அடுத்த ஆச் சரியம் கோவில் தல விருட்சம் இங்கும் வெண் நாவல் மரம்தான்.

சங்க தீர்த்தம்........... விண்ணுலக சிற்பியால் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் எழுப்பப்பட்ட வடரங்கம் ஆலயத்தில் வடபுறம் ஒரு பெரும்பள்ளம் உருவானது. விஷ்ணுவின் கட்டளைப்படி, அனைத்து புண்ணிய நதிகளும் இந்த பள்ளத்தில் ஒன்று சேர்ந்ததாகவும், அதில் தேவர்கள் அனைவரும் நீராடி மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

தேவர்களை ஆட்டிப்படைத்த அசுரன் ஒருவனை தனது சங்கத்தை ஏவி வதம் செய்தார் விஷ்ணு பகவான். பின்னர் அந்த சங்கத்தை இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் அலம்பி புனிதமாக்கினார். இதனால் தீர்த்தத்திற்கு சங்க தீர்த்தம் என்று பெயர். மேலும் அகஸ்திய முனிவரின் சாபத்தால், அவரது கமண்டலத்தில் அடைபட்டு துன்பப் பட்ட காவிரி, இந்த தீர்த்தத்தில் நீராடி தன் கணவனான சமுத்திரராஜனை சென்றடைந்தாள் என்றும் தல வரலாறு தெரிவிக்கின்றன.

எனவே கணவனை பிரிந்து வாடும் பெண்கள், இந்த தலத்து பெருமாளை தரிசனம் செய்தால் பிரிந்தவர் சேர்வார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. வெள்ளத்தில் அரங்கநாதர் கோவில் அடித்துச்செல்லப்பட்டாலும், ராமர் கோவில் எஞ்சி நின்றது. இதன் அருகில் கொள்ளிடம் ஆற்றோடு இணைந்து முப்பது அடிப்பள்ளமாக இன்றளவும் சங்க தீர்த்தம் காட்சியளிப்பதை காண முடிகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum