திருமண தடை நீக்கும் வாள் நெடுங்கண்ணியம்மை கோவில்
Page 1 of 1

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கடையூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கூரில் பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.
இத்தலத்தில் இறைவனாக தான்தோன்றீஸ்வரரும், இறைவியாக வாள்நெடுங்கண்ணியம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். காவிரியின் தென்கரையில் உள்ள தலங்களில் 46-வது தலமாக போற்றப்படும் இத்தலத்தின் சிறப்புகளை பற்றி தேவாரபாடல் ஆசிரியர்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.
தலவரலாறு............ 63 நாயன்மார்களில் ஒருவராக திகழும் கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். இவர் முற்கால சோழ மன்னர் ஆவார். ஆக்கூரில் உள்ள மக்கள் தங்கள் ஊரில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என கோச்செங்கட் சோழ மன்னனிடம் முறையிட்டனர்.
அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, கோவில் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் மன்னர் ஈடுப்பட்டார். அவ்வாறு கோவில் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, இறைவன் தானாக தோன்றியதாக தலவரலாறு கூறுகிறது. இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கோவில் கட்ட குழி தோண்டும் போது சிவலிங்கத்தில் அடிப்பட்டது. அவ்வாறு அடிப்பட்டதால் ஏற்பட்ட தழும்பை இன்றும் நாம் காணலாம்.
தலபெருமைகள்....... இத்தலம் சிறப்புலி நாயனார் பிறந்து, வளர்ந்து முக்தியடைந்த தலமாகும். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். அகத்தியருக்கு சிவன் திருமண கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள முருகப்பெருமானின் சிறப்புகளை பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
இறைவனே வந்து பந்தியில் அமர்ந்து, விருந்து உண்ட பெருமையுடைய தலம் என்பன போன்ற பல்வேறு சிறப்புகளை இத்தலம் பெற்றுள்ளது. இறைவனுக்கு வலது புறத்தில் இறைவி வாள் நெடுங்கண்ணியம்மை வீற்றிருப்பதால் திருமண தடையுள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிபட வேண்டிய தலம் என தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் இத்தலத்தில் திருமண பாக்கியம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமமும், குழந்தை பாக்கியம் வேண்டி சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும் நடைபெற்று வருகிறது.
சுயம்வர பார்வதி ஹோமம்.................. ஒரு சமயம் சிவனும், பார்வதியும் பூலோகத்தை சுற்றிவரும் போது, பார்வதி தேவி, சிவனிடம் பூலோகத்தில் அழகிய மாளிகை அமைத்து, அதில் குடியேற வேண்டும் என வேண்டுகிறார். அம்பிகையின் வேண்டுதலுக்கு ஏற்ப தேவதச்சனை அழைத்து பூலோகத்தில் அழகிய மாளிகையை கட்ட ஆணையிடுகிறார். இறைவனின் ஆணைப்படி அழகிய மாளிகை கட்டி முடிக்கப்பட்டது.
அழகிய மாளிகையில் முனிவர் புலஸ்தியர் தலைமையில் பல ரிஷிகள் கிரக பிரவேசம் செய்கின்றனர். இறைவனும், இறைவியும் மன மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த வேளையில் உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என முனிவரிடம் இறைவன் கேட்கிறார். அதற்கு புலஸ்திய முனிவரும், இதர அனைத்து முனிவர்களும் உங்களது அருள் மட்டும் போதும் இறைவா என்றனர்.
ஆனால் புலஸ்திய முனிவரின் தர்மபத்தினி இந்த மாளிகை வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறார். இதனை சற்றும் எதிர்பாராத பார்வதி தேவி இந்த மாளிகை என்றும் ரண களமாகட்டும் என்று சாபமிட்டு இறைவனிடம் இருந்து விடைபெற்று அத்திரி மகரிஷியின் வளர்ப்பு மகளாக வளர்ந்து வருகிறார். பார்வதிதேவியை பிரிந்து இறைவன் கைலாயத்தில் தியானத்தில் மூழ்கினார்.
இவ்வாறு பல ஆண்டுகள் கடந்தன. அகஸ்திய முனிவர், இறைவனிடம், எப்பொழுது அம்பிகையுடன் சேர்ந்து எங்களுக்கு அருள்புரிவீர்கள் என்று கேட்கிறார். இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியை சேரும் நாள் விரைவில் நடைபெறும் என்றும் அதற்குரிய கால கட்டம் நெருங்கி விட்டது என்றார். இறைவனிடம் சேருவதற்கு அம்பிகை திருமணத்திற்கான மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும் வாள்நெடுங்கண்ணி அம்மன். என்றார்
அகஸ்திய முனிவரிடம், பார்வதி தேவி நான் இறைவனிடம் சேர என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். உடனே முனிவர் சுயம்வர பார்வதி தேவி மந்திரத்தை தினமும் கூற வேண்டும் என்றார். முனிவரின் கூற்றுப்படி தினமும் அம்பிகை சுயம்வர பார்வதி தேவி மந்திரத்தை கூறி வர இறைவன் நேரில் வந்து அம்பிகையை ஆட்கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.
மணக்கோலத்தில் இறைவன் - இறைவி.............
அம்பிகை நாள்தோறும் ஜபம் செய்த இடம் தான் ஆக்கூர். அம்பிகை செய்த மந்திரமே சுயம்வர பார்வதி மந்திரம். அகஸ்தியருக்கு மணக்கோலத்தில் இறைவன் காட்சி அளித்த தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆதலால் இன்றும் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மணக்கோலத்தில் இறைவனும், இறைவியும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த புராண வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் இத்தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்று வருகிறது. முன்பு ஒருமுறை சிறப்புலி நாயனார் இந்த கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியபோது, 999 பேர் மனிதர்களும் ஆயிரமாவது ஆளாக சிவபெருமான் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.
இச்சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவமும், பங்குனி மாதத்தில் வசந்தநவராத்திரி உற்சவமும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வசந்த நவராத்திரி உற்சவம் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி நடைபெறுகிறது.
சிறப்பு அர்ச்சனை......... சர்க்கரை நோயாளிகளுக்கு என இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதாவது சர்க்கரை நோயாளிகள் தங்களது நட்சத்திரத்திற்குரிய நாளில், அர்ச்சனை செய்து இங்குள்ள இறைவனை வழிபட்டால் சர்க்கரை நோய் நீங்குவதாக ஐதீகம். அதன்படி இன்றும் சர்க்கரை நோயாளிகள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தலஅமைவிடம்.......... மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில் வழியாக திருக்கடையூர் செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமண தடை நீக்கும் வாள் நெடுங்கண்ணியம்மை கோவில்

» சர்ப்ப தோஷம் நீக்கும் கோவில்
» தோஷங்கள் நீக்கும் ஆம்பூர் சப்தகன்னி கோவில் குளதீர்த்தம்
» ஜெனிலியா போட்ட வாள் சண்டை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum