தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோஷங்கள் நீக்கும் ஆம்பூர் சப்தகன்னி கோவில் குளதீர்த்தம்

Go down

தோஷங்கள் நீக்கும் ஆம்பூர் சப்தகன்னி கோவில் குளதீர்த்தம் Empty தோஷங்கள் நீக்கும் ஆம்பூர் சப்தகன்னி கோவில் குளதீர்த்தம்

Post  meenu Sun Mar 24, 2013 2:10 pm



வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊட்டல் மலைப்பகுதியில் அமைந்துள்ள 7 சப்த கன்னிகளின் கோவில் சிறப்பு அம்சங்கள் கொண்டதாக திகழ்கிறது. ஆம்பூரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் வாணியம்பாடி- உமராபாத் மெயின் ரோட்டில் கோவில் உள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் இயற்கை எழிலுடன் கோவில் உள்ளது.

இந்த கன்னி கோவிலில் 7 சிலைகள் கொண்ட அக்கா, தங்கைகள், வனதேவதைகள் வலம் வருவதாக கூறுகின்றனர். முன்னோர் காலத்தில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கண்களுக்கு சப்த கன்னிகள் காட்சி அளித்து ஆடு, மாடுகள் குடிக்க காட்டு பகுதியில் ஒரு பாறையின் கீழ் சிறு குளத்தில் தண்ணீர் இருப்பதை காட்டியுள்ளது.

இந்த புண்ணிய தீர்த்தம் மிகவும் விசேஷமானது. இங்கு நீராடினால் உடல் பிணி, ஜென்ம கர்மங்கள் தீரும், பில்லி சூனியம், ஏவல் போன்ற துஷ்ட கிரகங்கள் விலகும். தோல் நோய் நீங்கும், தீர்த்தத்தில் நீராடி சப்தகன்னிகளை வழிபட்டால் கல்யாண தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், இங்கு ராகு கேதுகளுக்கு ஞாயிறு செவ்வாய்க்கிழமைகளில் தோஷநிவர்த்திகள் செய்யப்படுகிறது.

சனி பெயர்ச்சியும் செய்யப்படுகிறது. குளத்தில் 5 தலை நாகதேவதை குடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுகுளத்து நீரில் தாமரை செடிகள் மற்றும் மூலிகை செடிகள் நிரம்பியுள்ளது. அந்த இடத்துக்கு வந்து தண்ணீரை கண்ணால் பார்த்தாலே எல்லாவித பாவங்களும் நீங்கி நிவர்த்தி அடைவதாக பக்தர்கள் நம்பிக்கையில் வேண்டி நிவர்த்தி அடைகின்றனர். இந்த குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாது.

பாறைகளில் இருந்து ஊற்று வந்து கொண்டே இருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வருகின்றனர். இதுதவிர மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆங்கில புத்தாண்டு, தை பொங்கல், தை பூசம், தமிழ் புத்தாண்டு, சித்திரை பவுர்ணமி, ஆடிபெருக்கு போன்ற நாட்களில் விஷேச திருவிழா நடக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum