தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கைச்சின்னேஸ்வரர் கோயில் - கச்சனம்

Go down

கைச்சின்னேஸ்வரர் கோயில் - கச்சனம் Empty கைச்சின்னேஸ்வரர் கோயில் - கச்சனம்

Post  birundha Sun Mar 31, 2013 2:02 pm

ஸ்தல வரலாறு....

மூலவர் - கைச்சினநாதர்
அம்மன் - பல்வளை நாயகி
தல விருட்சம் - கொங்கு, இலவம்
தீர்த்தம் - இந்திரதீர்த்தம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - கைச்சினம்
ஊர் - கச்சனம்
மாவட்டம் - திருவாரூர்

மனிதன் வீரமும் ஆற்றலும் உடையவனாகவோ, படித்துவிட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஆற்றலையும், கல்வியையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரசுவதியை முதலிலும், அடுத்து ஆற்றலுக்குரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர்.

கல்வியும் ஆற்றலும் இருந்தாலும் சோம்பலை விட்டவரே செல்வத்தை அடைய முடியும் என்பதற்கேற்ப இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை........

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum