சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
Page 1 of 1
சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
ஸ்தல வரலாறு...
நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இசைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் இருவரையும் “இசையமைப்பாளர்” என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
சிவன், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழுவதற்கு ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. பங்குனி 20ம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி தனி சன்னதியில் இருக்கிறாள். சண்டிகேஸ்வரர் இங்கு, மனைவியுடன் இருக்கிறார். புடைப்பு சிற்பமாக உள்ள விநாயகரை, நான்கு பூத கணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு துர்க்கைக்கு தனி சன்னதி இருக்கிறது.
தெட்சிணாமூர்த்தி சிறப்பு............
பொதுவாக தெட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்க விட்டிருப்பார். ஆனால், இந்தக் கோயில் கோஷ்டத்தில் (சுவாமி சன்னதி சுற்றுச்சுவர்) உள்ள தெட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவரிடம் வேண்டிக்கொண்டால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum