தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடகநல்லூர் கோவில்

Go down

கோடகநல்லூர் கோவில் Empty கோடகநல்லூர் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 12:42 pm

ஸ்தல வரலாறு.......

நெல்லை அருகே கார்கோடகனுக்கு ஸ்ரீமந்நாராயணன் காட்சி கொடுத்த கார்கோடகசேத்திரம் உள்ளது. இத்தலம் சேரன்மாதேவி-முக்கூடல் போகும் வழியில் தெற்கே அமைந்திருக்கிறது என்று கேள்வி. இதன் பழைய பெயர் கார்கோடக நல்லூர், மறுவி கோடகநல்லூராகி முடிவாக கோடனூர் விட்டதாம்.

உலகிலுள்ள மிகப்பெரிய பாம்புகளில் அதிக சக்தி வாய்ந்தவை வாசுகி மற்றும் கார்கோடகன் ஆகிய இரு பாம்புகளாகும். கார்கோடகன் பூமியில் வந்து அடர்ந்த காடு ஒன்றில் தவமிருந்த நிலையில் பயங்கரமான காட்டுத்தீ பற்றிக்கொண்டது. அப்போது அக்காட்டிற்கு வந்த சக்ரவர்த்தி நளமஹாராஜன் கார்டகோடகனை காப்பாற்றினார்.

7 சனியின் பிடியில் இருந்த நளமகாராஜனுக்கு கார்கோடகன் தன் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு மிகவும் உதவினான். அத்தகைய மகத்தான் சேத்திரம் கார்கோடக சேத்ரமாகும். இக்கோவிலும் தாமிரபரணிக் கரையில் அமைந்த கோவிலே. இங்கே தாமிரபரணி தீர்த்தத்தின் பெயர் மார்க்கண்டேய தீர்த்தம் என்பதாம்.

மார்க்கண்டேய மஹரிஷி இங்கு வந்து தவமிருந்ததால் இப்பெயர் பெற்றதாகத் தெரிகிறது. இக்கோவிலில் இருக்கும் கல்வெட்டில் இவ்வூருக்கு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத மரங்கள் நிறைந்த சோலையாக இருப்பதால் கோடை வாச ஸ்தலம் போன்று குளிர்ச்சியான ஊர்.

இங்குள்ள ஈசனது திருநாமம் கைலாசநாதர், அம்பிகை சிவகாமியம்மன் இந்த பெருமாள் கோவிலே பெரிய பிரான் கோவில் என்று அழைக்கப்படுகிறது.. பல நூறு வருடங்களாக சைவ-வைஷ்ண சமயங்கள் இணைந்து தழைத்தோங்கும் திருத்தலம் என்று தெரிகிறது. சிருங்கேரி, மற்றும் ஆண்டவன், அகோபில மடங்கள் இங்கு பல காலமாக இருக்கிறது..

இக்கோவிலில் விநாயகர், வள்ளி தேவ சேனாபதி, நந்தி போன்ற தேவதைகளுடன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமியம்மை தெற்கு நோக்கியும் எழுந்தருளி அருள்கின்றனர். கோவிலுக்கு கொடிமரம் ஏதும் கிடையாது..

தற்போது ஒரு நேர பூஜை மட்டுமே நடந்து வருவதாகவும், சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை போன்ற விசேஷங்கள் நடப்பதாகவும் தெரிகிறது. நான்கு வேதங்கள் முழங்க இருந்த இவ்வூர் இன்று ஈசனது ஒருகால பூஜையுடன் இருப்பது வருந்ததக்க செய்திதான். ராகுவினால் ஏற்படும் தோஷத்திற்கு முக்கியமாக திருநாகேஸ்வர தரிசனமும், கேதுவினால் ஏற்படும் தோஷத்திற்கு திருகாளஹஸ்தியும் முக்கியமான தலமாகும்.

இந்த இரு தலங்களில் செய்த பரிகாரத்தால் தீர்க்க முடியாத தோஷத்தையும் தீர்த்து வைக்கும் திவ்ய ஸ்தலமே கார்கோடக சேத்திரமாகும். இங்கு எம்பெருமான் மாதவனுக்கும் கருடனுக்கும் அமிர்தகலசம் தோஷங்கள் யாவும் நீங்குகின்றது. இந்த தலம் திரேதாயுகத்திலிருந்து வருவதாக தல புராணம் கூறுகிறது. செவ்வாய் தோஷம் போன்றவற்றிற்கு இத்தலமே பரிகாரத் தலம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum