சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படக்குழு
Page 1 of 1

1981 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கினார். கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய 5 மொழிகளிலும் இப்படம் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில், மீண்டும் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை 18 வயதே ஆன சினேகா பிரிட்டோ இயக்குகிறார். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் 3 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகச் சிறிய வயதில் இயக்குனராகும் முதல் பெண் இயக்குனர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், ரீமாசென், தமன், பிந்து மாதவி, பியா பாஜ்பாய் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
இயக்குனரான சினேகா பிரிட்டோ லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை எஸ்தல் எண்டர்டெயிண்மெண்ட் சார்பாக விமலா பிரிட்டோ தயாரிக்கிறார்.
எஸ்தல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லயோலா கல்லூரியில் ‘டேலண்ட் ஹண்ட்’ என்ற பெயரில் இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடனம், நடிப்பு, கதை, திரைக்கதை என சினிமாவின் பலதுறை சார்ந்து மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் தேர்வாகிறவர்கள் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ கூறும்போது, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக திறமை படைத்த பல இளைஞர்கள் சினிமாவில் பல துறைகளிலும் சாதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற திறமையாளர்கள் தாங்கள் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சி குறித்து இயக்குனர் சினேகா பிரிட்டோ கூறும்போது, நான் சிறு வயதிலிருந்தே என்னுடைய தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் சித்தப்பா விஜய் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளேன். இதனால் எனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதையே, என் பெற்றோரிடமும் கூறினேன். எனது பெற்றோர்கள் அதற்கு சம்மத்தித்து என்னை இயக்குனராக ஆக்கியுள்ளனர். ஆனால், என்போல் திறமை இருந்தும் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தொடங்கியது சட்டம் ஒரு இருட்டறை
» டிசம்பரில் தேதி தேடும் விஸ்வரூபம் படக்குழு
» சட்டம் ஒரு இருட்டறை பெயர் மாறியது
» சட்டம் ஒரு இருட்டறை'யில் ரீமா!
» சட்டம் ஒரு இருட்டறை: ஆடியோ வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum