மாற்றான் ஸ்கேன்களை கேட்கிறார் சூர்யா
Page 1 of 1
மாற்றான் ஸ்கேன்களை கேட்கிறார் சூர்யா
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மாற்றான். இதில் சூர்யா, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். இதில் அகிலன், விமலன் என்ற இரண்டு கேரக்டர் வரும். இதில் அகிலன் கேரக்டரில்தான் சூர்யா படப்பிடிப்பில் நடித்தார். விமலன் கேரக்டரில் வேறொருவர் நடித்தார். பின்னர் சூர்யா புளூமெட் முறைப்படி தனியாக விமலன் கேரக்டரில் நடித்து அது ஏற்கெனவே நடித்தவர் மீது தொழில்நுட்ப ரீதியாக பேஸ்ட் செய்யப்பட்டது. இதில் துல்லியமான லைட்டிங், துல்லியமான முகபாவம் வரவேண்டும் என்பதற்காக ஒரு நவீன முறையை கையாண்டார்கள்.
இது அவதார் படத்தில் ஜேம்ஸ் கேரூன் பயன்படுத்தியது. லைட்டிங் பால் என்ற முறையில் இது சாத்தியமானது. ஒரு ராட்சத பந்து போன்ற அமைப்பில் 360 டிகிரி கோணத்திலும், லைட்டிங் செய்யப்பட்டு 360 மினி கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கும், இதன் நடுவில் நின்று சூர்யா பல்வேறு விதமான உணர்வுகளை காட்டினார், மகிழ்ச்சி, துக்கம், அழுகை, ஆச்சர்யம், இப்படி விதவிதமாக செய்தார். அவை அனைத்தும் 360 டிகிரி கோணத்திலும் ஸ்கேன் செய்யப்பட்டது.
இந்த ஸ்கேனை வைத்துக் கொண்டு சூர்யா போன்ற அனிமேஷன் படங்களை உருவாக்க முடியும், அவ்வளவு ஏன் சூர்யா கால்ஷீட் கிடைக்காவிட்டால் அவர் நடிப்பது போன்ற படத்தையே எடுத்துவிட முடியும். இந்த ஸ்கேன்கள் தவறானவர்கள் கையில் கிடைத்தால் சூர்யா நடிப்பில் எந்தப் படத்தையும் எடுத்து விட முடியும். அதனால்தான் ஹாலிவுட் நடிகர்கள் இந்த 360 டிகிரி ஸ்கேனுக்கு ஒத்துக் கொள்வதில்லை. இப்போது மாற்றான் படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பங்கள் வெளியில் தெரியத் தொடங்கி விட்டன. அதனால் சூர்யா தனது தொடர்பான அனைத்து ஸ்கேன்கள், மற்றும் சாப்ட்வேர்களை கேட்டுள்ளார். அதை மொத்தமாக அவரிடம் கொடுக்கும் வேலைகளை அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இப்படி ஒரு வசதி இருந்தால்… தலைவரை வைத்து இப்போதும் வெற்றிப்ப படங்களை எடுத்துக் கொண்டிருந்திருக்கலாமே…!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாற்றான் இசை விழா - நடனமாடிய சூர்யா, கார்த்தி
» தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» தெலுங்கு மாற்றான் - சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» ‘மாற்றான்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த அனுபவம்-சூர்யா
» என்னை மறந்துட்டீங்களா...? - கேட்கிறார் எமி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum