தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றான் இசை விழா - நடனமாடிய சூர்யா, கார்த்தி

Go down

மாற்றான் இசை விழா - நடனமாடிய சூர்யா, கார்த்தி Empty மாற்றான் இசை விழா - நடனமாடிய சூர்யா, கார்த்தி

Post  ishwarya Sat Mar 09, 2013 12:10 pm

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருக்கும் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சிங்கப்பூ‌ரில் நடந்தது. தமிழின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துவது பிரபலமாகி வருகிறது. விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விளம்பரத்தை தீவிரப்படுத்தும் வச‌தி இதில் உள்ளது. நேற்று மாற்றான் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூர் எக்ஸ்போ ஹாலில் நடந்தது. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். படத்தின் முதல் இசைத்தட்டை கௌதம், ஹ‌ரி, லிங்குசாமி இணைந்து வெளியிட சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயரா‌ஜ் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. படத்தின் இசையமைப்பாளர் ஹா‌ரிஸின் கச்சே‌ரி இன்னொரு சிறப்பு. படத்தின் நாயகன் சூர்யா ஒரு பாடலுக்கு திடீரென மேடையில் தோன்றி ஆட, அரங்கம் அம‌ர்க்களப்பட்டது. அவருடன் கார்த்தியும், பிரசன்னாவும் இணைந்து ஆடினர்.

சிவகுமார், பிரபு போன்றவர்கள் வாழ்த்திப் பேசினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum