புத்தம் புதிய விஜய்யே துப்பாக்கி வெற்றிக்கான மந்திரம்! ஏ.ஆர்.முருகதாஸ்
Page 1 of 1

தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்லேயும் வெற்றிப்படங்களை இயக்கியவர் இவர்தானா?ன்னு ஆச்சரியப்படுற அளவுக்கு அடக்கத்தோட பேசுறாரு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்குமார், அமீர்கான், விஜயகாந்த், சிரஞ்சீவி, சூர்யா… இவங்க எல்லாரோட கேரியர்லயும் அதிக வசூலை வாரிக் குவிச்ச படத்தை இயக்கினவர் இவர்தான். அந்த வரிசையில் இப்போ… விஜய்-ன் துப்பாக்கி!
* துப்பாக்கியின் வெற்றிக்கான மந்திரம்…?
புத்திசாலித்தனமான விஷயங்களை விரும்பி ரசிக்கிற ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட அறிவுப்பூர்வமான காட்சிகள்; காதல், நகைச்சுவை, ஆக்ஷ்ன், த்ரில்லர் எல்லாம் கலந்து, எல்லோருக்கும் புரியும்படியாகவும், பிடிக்கும்படியாகவும் அமைக்கப்பட்ட திரைக்கதை தான். இதெல்லாத்துக்கும் மேல, புத்தம் புதிய விஜய்.
* விஜய்யிடம் என்ன வித்தியாசம்…?
இதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச எந்த கமர்ஷியல் படத்தோட சாயலும், கதாபாத்திரத்தோட சாயலும் வந்திரக்கூடாது!ங்கறதுல ரொம்ப கவனமா இருந்தேன். எனக்கு பிடிச்ச பிரபல எழுத்தாளர் சுஜாதாவோட துப்பறியும் கதைகள்ல வர்ற துறுதுறு கதாபாத்திரமான வசந்த்தோட சாயல்ல விஜய்யோட பாத்திரத்தை படைச்சிருக்கேன்.
* படப்பிடிப்பில் சிரமம்…?
இதுக்கு முன்னாடி மும்பையை களமா வைச்சு எடுக்கப்பட்ட படங்கள் மாதிரி… கொஞ்ச காட்சி மும்பையில! அப்புறம் செட் போட்டு இங்கே சென்னையிலன்னு இல்லாம, முழுக்க முழுக்க மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்தினோம். விஜய் மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்ச ஹீரோவை வைச்சுக்கிட்டு, மக்கள், நெரிசல் நிறைஞ்ச இடங்கள்ல காட்சிகளை எடுக்கறது ரொம்ப சிரமங்க!
* காஜல் அகர்வால்…?
என்னோட எல்லா படங்கள்லேயும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதேமாதிரி, இந்த படத்துலேயும் காஜல் அகர்வாலுக்கு கிக் பாக்ஸர் கதாபாத்திரம். பொண்ணு கிக் பாக்ஸிங், பயிற்சி எல்லாம் எடுத்துக்கிட்டு சும்மா பட்டையை கிளப்பியிருக்கு!
* ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்…?
வேகமா, அதேநேரத்துல நேர்த்தியா வேலை பார்க்கறதுல அவரை அடிச்சிக்க ஆளே இல்லை! காதல், நிழல் உலகம்… இது ரெண்டையும் விஷூவலா வேறுபடுத்தி காட்டக்கூடிய ஒளிப்பதிவாளர் வேணும்னு முடிவு பண்ண உடனே, சந்தோஷ் சிவன் சார்கிட்ட கதை சொன்னேன். எதிர்பார்த்ததைவிட படம் அழகா வந்திருக்கறதுக்கு முக்கியமான காரணம் அவர்தான்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கி படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
» அஜீத்துக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்
» முருகதாஸ்-விஜய் கூட்டணி! துப்பாக்கி II இல்லை!
» துப்பாக்கி 2ஆம் பாகம் கிடையாது – முருகதாஸ்
» துப்பாக்கி 2ஆம் பாகம் கிடையாது - முருகதாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum