தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபத்துக்கு நெருக்கடி தரும் ஸ்டுடியோ கி‌‌ரீன்

Go down

விஸ்வரூபத்துக்கு நெருக்கடி தரும் ஸ்டுடியோ கி‌‌ரீன் Empty விஸ்வரூபத்துக்கு நெருக்கடி தரும் ஸ்டுடியோ கி‌‌ரீன்

Post  ishwarya Fri Mar 29, 2013 6:23 pm

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் மத கஜ ராஜா, ஆர்யாவின் சேட்டை ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவருவதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக தெ‌ரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ஜனவ‌ரி 11ஆம் தேதி விஸ்வரூபமும் வெளியாவதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் நான்கு பெ‌ரிய படங்கள் வெளியாவதால் திரையரங்குகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் அலெக்ஸ் பாண்டியனை வெளியிடும் ஸ்டுடியோ கி‌‌ரீன் அட்டகத்தி, கும்கி, அலெக்ஸ் பாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று தொடர்ந்து படங்களை வெளியிடுட்டு வருவதால் நல்ல திரையரங்குகளில் கணிசமான எண்ணிக்கையை அலெக்ஸ் பாண்டியனுக்காக வளைத்துள்ளது. அத்துடன் பிப்ரவ‌ரி மாதம் வெளியிடுவதாக இருந்த கேடி பில்லா கில்லாடி ரங்காவை ஜனவ‌ரி 14ஆம் தேதியே வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

பாண்டிரா‌ஜ் இயக்கியிருக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்காவை விநியோகிக்கும் உ‌ரிமையை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கி‌‌ரீன் வாங்கியுள்ளது. பிப்ரவ‌ரியில் இதனை வெளியிடுவதாக இருந்த ஞானவேல் ராஜா விஸ்வரூபம் ‌ரிலீஸ் அறிவிப்பு வெளிவந்த பிறகு தனது திட்டத்தை மாற்றி ஜனவ‌ரி 14ஆம் தேதியே கேடி பில்லாவை வெளியிட முடிவு செய்துள்ளார்.

இதனால் விஸ்வரூபம் உள்ளிட்ட மற்ற படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக‌த் தெ‌ரிவிக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum