தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எவர்கி‌‌ரீன் ஸ்டார் தேவயானி

Go down

எவர்கி‌‌ரீன் ஸ்டார் தேவயானி Empty எவர்கி‌‌ரீன் ஸ்டார் தேவயானி

Post  ishwarya Fri Mar 29, 2013 1:05 pm

இரண்டு மூன்று மாமாங்கத்துக்கு முன்னால் ராஜகுமாரன் திருமதி தமிழ் என்ற படத்தை தொடங்கினார். அதுக்கென்ன இப்போ என்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல். அந்த அரத பழசை விரைவில் வெளியிடப் போகிறாராம் ராஜகுமாரன்.

இவரை வைத்து யார்யா படம் தயா‌ரித்தது என்று தானே யோசிக்கிறீர்கள்…? வேறு யார் மனைவி தேவயானிதான். இவ‌ரின் இராதே ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது. கீர்த்தி சாவ்லா ஹீரோயின். தேவயானிக்கு வழக்குரைஞராக வெயிட்டான வேடம் என்று அப்போது சொன்னார்கள். ஹீரோ.. சாட்சாத் ராஜகுமாரனேதான்.

கீர்த்தி சாவ்லா என்றெhரு நடிகை இருந்ததற்கான அடையாளமே தற்போது இல்லாததால் தேவயானியின் பெயரை வைத்துதான் விளம்பரம் தருகிறார்கள். சமீபத்தில் இதன் ட்ரெய்லர், பாடல்களை வெளியிட்டு பத்தி‌ரிகையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ராஜகுமாரன் என்பதையும் சேர்த்து வாசியுங்கள்.

டைட்டில் மேட்டருக்கு வருவோம். தேவயானிக்கு இது 75வது படமாம். தொடர்ந்து 75 படங்களில் அதுவும் ஹீரோயினாகவே நடித்தது ஒரு சாதனை என்று எவர்கி‌‌ரீன் ஸ்டார் பட்டத்தை தனது மனைவிக்கு தந்திருக்கிறார் ராஜகுமாரன்.

ஹீரோயினாவதற்கு முன் சத்யரா‌ஜ் நடித்த (சிவ சக்தி?) படத்தில் ஒரேயொரு பாடலுக்கு கவர்ச்சி உடையில் அம்மணி குத்தாட்டம் போட்டதை வசதியாக மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum