விஸ்வரூபம் படம் பார்த்தால் ஒலி வெள்ளத்தில் மூழ்கிய உணர்வு கிடைக்கும்: கமலஹாசன் பேச்சு
Page 1 of 1

விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதற்காக மதுரையில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக கமலஹாசன் கோவை வந்தார். அவருக்கு மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இசை வெளியீட்டு விழாவில் படத்தின் பாடல்களை கமலஹாசன், பாடகர் சங்கர் மகாதேவன் இணைந்து பாடினர். பின்னர் படத்தின் பாடல்களை கமலஹாசன் வெளியிட ரசிகைகள் பெற்றுக் கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பேசியதாவது:-
ஏழை தொழிலாளியாக இருந்து திரைப்பட தயாரிப்பாளராக உயர்ந்து கோவையைச் சேர்ந்த சின்னப்பதேவர் திரையுலகில் இருந்த காலத்தில் நான் சிறிய ஊழியனாக பணியாற்றியுள்ளேன். எம்.ஜி.ஆரை வைத்து 19 படங்களை அவர் தயாரித்துள்ளார். அவர் என்னை முதன் முதலில் திரைப்படத்தில் நடிக்க வைக்க முயற்சியும், வாழ்த்தும் கொடுத்த பின்புதான் கே.பாலச்சந்தர் கண்ணில் பட்டேன்.
சதி லீலாவதி படத்தில் கோவை கொங்கு தமிழில் பேசி நடித்துள்ளேன். அழகு, அறிவு, சண்டை, திரில்லரும் சேர்ந்தது தான் ‘விஸ்வரூபம்’ படம். இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆரோ 3டி ஒலி தொழில் நுட்பத்தில் உலகில் இரண்டாவது முறையாகவும், ஆசியாவில் முதன் முறையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தை பார்க்கும்போது ஒலி வெள்ளத்தில் மூழ்கிய உணர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இசை வெளியீட்டு விழாவின்போது ரசிகர்கள் மேடையை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த மேடையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் நடிகை பூஜாகுமார், இசையமைப்பாளர்கள் இஷான், லாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலஹாசன் ஏற்பாடு: ரஜினிகாந்த், வீட்டில் விஸ்வரூபம் படம் பார்த்தார்
» படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்! மண்டியிட்ட மாவீரன்!!
» கமலஹாசன் பிறந்தநாளான நவ.7-ல் ‘விஸ்வரூபம்’ ஆடியோ வெளியீடு: டிசம்பரில் 14-ல் படத்தை வெளியிட முடிவு
» ரசிகர்கள்தான் எனது பலம்: மதுரையில் "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு
» விஸ்வரூபம் படம் டெல்லியில் நாளை ரிலீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum