தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்! மண்டியிட்ட மாவீரன்!!

Go down

படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்! மண்டியிட்ட மாவீரன்!! Empty படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் இலவசம்! மண்டியிட்ட மாவீரன்!!

Post  ishwarya Wed Apr 17, 2013 6:24 pm

தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடிய நிலைமை மாறி, இப்போதெல்லாம் தியேட்டர்கள் காலியாக இருந்தும் படம் பார்க்க ஆள் வராத நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு திருட்டு விசிடிதான் காரணம் என்று திரையுலகினரால் சொல்லப்பட்டாலும், அங்காடித்தெரு, மைனா போன்ற மினிமம் பட்ஜெட் நல்ல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

அதேநேரம் பலகோடி செலவில் எடுக்கப்பட்ட படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையைத்தான் கோடிக்கணக்கான ரூபாய் செல்வில் எடுக்கப்பட்ட மாவீரன் படம் சந்தித்திருக்கிறது. ஆந்திராவில் சக்கைபோ‌டு போட்ட மகரதீரா படத்தின் தமிழ் ரீ-மேக்தான் மாவீரன் படம். ஆந்திரா சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா – காஜல் அகர்வால் ஜோடி நடிப்பில் கடந்த மாதம் 23ம்தேதி ரீலிஸ் ஆனது. திருச்சி லால்குடியில் ஒரு தியேட்டரிலும் இப்படம் ரீலிஸ் ஆனது. ஆனால் படம் பார்க்கத்தான் ரசிகர்கள் வரவில்லை. தியேட்டருக்கு படம் பார்க்க கூட்டம் வரவில்லை என்பதால் விட்டுவிடுவார்களா லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படத்தை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்கள்.

ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளும் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்களுக்கு அதிரடி சலுகை தர ஆரம்பித்து விட்டார்கள். திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஐஸ் க்ரீம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நம் மக்கள்தான் இலவசம் என்றால் அதை வாங்க அடித்து பிடித்து ஓடுவார்களே…? மாவீரன் படத்தை பார்க்கவும் எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடி விட்டது. இதனால் தியேட்டர் அதிபர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

இந்த ஐஸ் ஐடியா ஓரளவுக்கு வெற்றி பெற்றிருப்பதால் பல தியேட்டர்களில் இனி இலவச ஐஸ்க்ரீம், பாப்கார்ன், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி என வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum