தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புட்லூர் கோவில் அமைப்பு

Go down

புட்லூர் கோவில் அமைப்பு Empty புட்லூர் கோவில் அமைப்பு

Post  birundha Fri Mar 29, 2013 4:35 pm

புட்லூர் ஆலயம் மிகச் சிறிய ஆலயம்தான். கருவறை மட்டுமே இன்னமும் 1000 ஆண்டுகளுக்கு முந்தையதுபோல உள்ளது. மற்றபடி மண்டபங்கள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தின் அருகில் வசிக்கும் கஜேந்திரன் தலைமையில் ஊர்மக்கள் மகா மண்டபம் மற்றும் நாகத்தம்மன் புற்றுகோவில் மண்டபம் கட்டி திருப்பணி செய்துள்ளனர். கோவில் முன்புறம் அழகான குளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவில் உள்ளே வலதுபுறத்தில் அரச மரவிநாயகரும், நவக்கிரகங்களும் உள்ளனர். கோவில் இடதுபுறத்தில் நாகத்தம்மன் புற்றுகோவில் உள்ளது. கோவில் சுற்று பிரகாரத்தில் இடதுபக்கம் தெட்சிணாமூர்த்தி, பீர்மமரூபிணி, பின்பக்கம் சாமூண்டீஸ்வரி, வலதுபக்கத்தில் ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீதுர்க்கை சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

கோவில் முன்புறத்தில் பலி பீடம், நந்தி உள்ளது. கொடி மரத்தை ஊர்மக்கள் கஜேந்திரன் ஏற்பாட்டின் பேரில் அமைத்து கொடுத்துள்ளனர். கஜேந்திரன் தலைமையில் ஊர்மக்களுக்கு சொந்தமான கிராம கோவிலாக இந்த ஆலயம் இருந்தது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக பொறுப்பில் உள்ளது.

கோவில் மயான கொள்ளை நடத்த தனி இடம் உள்ளது. அதுபோல கோவில் பின்புறத்தில் சப்த கன்னியர் ஆலயம் உள்ளது. அங்காள பரமேஸ்வரியை வழிபட்ட பிறகு சப்த கன்னியரையும் வழிபடுவது நல்லது. கோவில் கருவறை மீது 27 அடி உயரத்தில் கோபுர விமானம் உள்ளது. அதில் 5 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள் குளிக்க கோவில் வலது மூலையில் குழாய்கள் உள்ளன. அங்கு குளித்து விட்டு வருபவர்களால் கோவில் சுற்றுப்பகுதி முழுவதும் ஈரமாகி வருகிறது. இதனால் மற்ற பக்தர்கள் கோவிலை வலம் வந்து வழிபட சிரமப்படுகிறார்கள். இந்த குறையை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கோவில் சுற்றுப்பிரகாரம் தற்போது வெட்டவெளியாக உள்ளது. அதில் 16 லட்சம் ரூபாய் செலவில் நிழல் தரும் மேல் கூரை அமைத்து தர பிரபல தொழில்அதிபர் ஒருவர் முன்வந்துள்ளார். முதல் கட்டமாக பக்தர்கள் குளிக்கும் இடத்தை மாற்ற தீர்மானித்துள்ளனர்.

அன்னதான கூடமும் வர உள்ளது. திருப்பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டால், வெளிïர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பக்தர்கள் வசதிக்காக தற்போது கோவில் வலதுபுறத்தில் பெரிய இளைப்பாரும் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல இன்னும் பல வசதிகள் செய்யப்பட உள்ளது.

* புட்லூர் சன்னதியில் எலுமிச்சம் பழ வழிபாடு மட்டுமே நடத்தப்படுகிறது. தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யப்படுவதில்லை.

* 1980-ம் ஆண்டில்தான் புட்லூர் ஆலயம் பற்றி வெளியில் அதிகமாக தெரியவந்தது. 1999-ல் புட்லூர் ரெயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

* ஆடி மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் சார்பில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்படுகிறது.

* அம்மனின் பாதம் தொட்டு உருண்டு வரும் எலுமிச்சம் பழத்தை முந்தானையில் பிடிக்க இயலாமல் தவறி விட்டதாப கவலையேப்படாதீர்கள். மீண்டும் அம்மனை 3 தடவை சுற்றி வந்து கனி வாங்குங்கள்.

* புட்லூர் ஆலயத்தில் சமீப காலமாக பவுர்ணமி நாட்களிலும் பக்தர்கள் இரவில் தங்கி செல்கிறார்கள்.

* புட்லூர் ஆலயத்துக்கு கடந்த ஜுன் மாதம் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதுதான் சமீபகாலத்தில் நடந்த முதல் கும்பாபிஷேகமாகும்.

* 50 அண்டுகளுக்கு இந்த ஆலயம் அருகில் வரவே மக்கள் பயந்து போய் இருந்தார்களாம். மாசி திருவிழாவுக்கு மட்டுமே கோவில் பக்கம் வருவார்களாம்.

* புட்லூர் தலத்துக்கு அமாவாசை நாட்களில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

* புட்லூர் அங்காள பரமேஸ்வரியிடம் பெறும் எலுமிச்சம் பழத்தை டிரைவர்கள் தங்கள் காரிலும், வியாபாரிகள் தங்கள் கடையிலும் வைப்பதுண்டு.

* அம்மனின் வலது பாதத்தில் இருந்து எலுமிச்சம் பழம் உருண்டு வரும் வகையில் புற்று அமைந்துள்ளது.

* புட்லூர் தலத்தில் இருந்து எலுமிச்சம் மாலை பெற்று வந்து வீட்டுவாசலில் மாலைபோல் கட்டி தொங்கவிட்டால், வீட்டுக்குள் தீயசக்திகள் வராது என்பது ஐதீகம்.

* மாசி மாத விழாவின்போது புட்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 3 ஊர்களில் அங்காள பரமேஸ்வரிக்கு மக்கள் திரண்டு வந்து படையலிட்டு தீபாராதனை செய்து வணங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அப்போது ஆடு, கோழிகள் ஏராளமாக பலியிடப்படும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum