புட்லூர் கோவில் 30 தகவல்கள்
Page 1 of 1
புட்லூர் கோவில் 30 தகவல்கள்
1. அங்காள பரமேசுவரி அம்மன் ஆலயம் உண்மையில் இருப்பது ராமாபுரம் என்ற பகுதியிலாகும். அது புட்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊர் என்பதால் புட்லூர் அங்காள பரமேசுவரி என்ற பெயர் நிலைத்து விட்டது.
2. புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு பூங்காவனத்தம்மன் என்ற பெயரும் உண்டு.
3. புட்லூர் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமையானது.
4. இந்த ஆலயத்தில் மீன் சின்னம் உள்ளது. எனவே இந்த ஆலயத்தை பாண்டிய மன்னர்கள் அமைத்து, திருப்பணிகள் செய்ததாக கருதப்படுகிறது.
5. இதன் தலமரம் வேம்பு ஆகும். சிலர் பனை மரம் என்றும் சொல்கிறார்கள்.
6. குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் உள்ளவர்கள் இங்கு வந்து அங்காளம்மனை மனமுருகி வேண்டினால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
7. கணவர் தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள், தங்கள் புடவை முந்தானையில் இருந்து சிறிது கிழித்துக் கொள்வார்கள். பின்னர் அதனை கோயிலுக்கு வெளியே அமைந்திருக்கும் மண் புற்று அருகே உள்ள வேப்பமரக் கிளையில் கட்டுவார்கள். இப்படிச் செய்தால் அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது நடக்கவும் செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
8. புட்லூர் அங்காளம்மன் ஆலயத்தில் பொதுவாக ஆண்களை விட பெண்கள் கூட்டம் எப்போதும் திரளாக காணப்படும்.
9. இங்கு சிவராத்திரி விழா ரொம்பவும் விசேஷம். அன்றைய தினம் சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் விடிய விடிய நடைபெறும். இரவு முழுவதும் பக்தர்கள் கூட்டம் விழித்திருந்து இறைவன் அருளைப்பெற்று செல்வது கண்கொள்ளாக்காட்சி.
10. மாசி மகம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மயானக் கொள்ளை நடைபெறுவது சிறப்பு. அப்போது அம்பாளை நினைத்து வழிபட்டால், அவர்களுக்கு நன்மை கிடைக்கப்பெறும்.
11. ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பாகும். அன்று பெண்கள் பெருமளவில் திரண்டு வந்து அன்னையை வணங்கிச்செல்வர்.
12. ஒவ்வொரு அமாவாசை தினமும் புட்லூர் அங்காளம்மன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
13. பொதுவாக இந்த ஆலயம் காலை 6 மணிக்கு திறக்கப்படும். மதியம் ஒரு மணி வரை திறந்திருக்கும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். கோயில் நடை, இரவு 7 மணி 30 நிமிடங்கள் வரை திறந்திருக்கும்.
14. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான புறநகர் மின்சார ரெயில்கள் இந்த வழியாகச் செல்கின்றன. அவற்றில் புட்லூர் ரெயில் நிலையத்தில் இறங்கினால் 5 ரூபாய் கொடுத்து ஷேர்-அட்மோவில் கோயிலுக்குச் செல்ல முடியும். புட்லூர் தலத்துக்கு தினமும் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை சுமார் 25 ஆயிரமாக உயர்ந்து விடுகிறது.
15. புட்லூர் அங்காளம்மன், பக்தர்கள் கேட்டதை வாரி வழங்கும் இயல்புடையவள். எனவே, புட்லூர் சென்று பக்திப் பரவசத்துடன் அன்னையை வழிபட்டு வாழ்வில் எல்லா வளம் பெறலாம்.
16. அங்காள பரமேஸ்வரி புற்றுக்குள் அமர்ந்த தலம் என்பதால் புற்று + ஊர் = புட்லூர் என்றானது.
17. புட்லூர் தலம் ஆதிகாலத்தில் வேப்ப மர வனமாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
18. எல்லா அம்மன் தலங்களிலும் சிங்க வாகனம் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவபெருமான் கருவறையில் வீற்றிருப்பதால் நந்தி இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த சக்தி தலத்திலும் இத்தகைய நந்தி அமைப்பை காண இயலாது.
19. புட்லூர் சன்னதியில் எலுமிச்சம் பழ வழிபாடு மட்டுமே நடத்தப்படுகிறது. தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யப்படுவதில்லை.
20. 1980-ம் ஆண்டில்தான் புட்லூர் ஆலயம் பற்றி வெளியில் அதிகமாக தெரியவந்தது. 1999-ல் புட்லூர் ரெயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.
21. ஆடி மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் சார்பில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்படுகிறது.
22. அம்மனின் பாதம் தொட்டு உருண்டு வரும் எலுமிச்சம் பழத்தை முந்தானையில் பிடிக்க இயலாமல் தவறி விட்டதா? கவலையேப் படாதீர்கள். மீண்டும் அம்மனை 3 தடவை சுற்றி வந்து கனி வாங்குங்கள்.
23. புட்லூர் ஆலயத்தில் சமீப காலமாக பவுர்ணமி நாட்களிலும் பக்தர்கள் இரவில் தங்கி செல்கிறார்கள்.
24. புட்லூர் ஆலயத்துக்கு கடந்த ஜுëன் மாதம் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதுதான் சமீபகாலத்தில் நடந்த முதல் கும்பாபிஷேகமாகும்.
25. 50 அண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் அருகில் வரவே மக்கள் பயந்து போய் இருந்தார்களாம். மாசி திருவிழாவுக்கு மட்டுமே கோவில் பக்கம் வருவார்களாம்.
26. புட்லூர் தலத்துக்கு அமாவாசை நாட்களில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
27. புட்லூர் அங்காள பரமேஸ்வரியிடம் பெறும் எலுமிச்சம் பழத்தை டிரைவர்கள் தங்கள் காரிலும், வியாபாரிகள் தங்கள் கடையிலும் வைப்பதுண்டு.
28. அம்மனின் வலது பாதத்தில் இருந்து எலுமிச்சம் பழம் உருண்டு வரும் வகையில் புற்று அமைந்துள்ளது.
29. புட்லூர் தலத்தில் இருந்து எலுமிச்சம் மாலை பெற்று வந்து வீட்டுவாசலில் மாலைபோல் கட்டி தொங்கவிட்டால், வீட்டுக்குள் தீயசக்திகள் வராது என்பது ஐதீகம்.
30. மாசி மாத விழாவின்போது புட்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 3 ஊர்களில் அங்காள பரமேஸ்வரிக்கு மக்கள் திரண்டு வந்து படையலிட்டு தீபாராதனை செய்து வணங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அப்போது ஆடு, கோழிகள் ஏராளமாக பலியிடப்படும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» புட்லூர் கோவில் 30 தகவல்கள்
» புண்ணியம் தரும் புட்லூர்
» புட்லூர் கோவில் அமைப்பு
» புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்
» புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்
» புண்ணியம் தரும் புட்லூர்
» புட்லூர் கோவில் அமைப்பு
» புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்
» புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum