தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு

Go down

ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு Empty ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு

Post  ishwarya Fri Mar 29, 2013 3:00 pm

நடிகை மம்தா மோகன்தாஸ் கணவரை பிரிந்துள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்வது குறித்து வக்கீல்களை அழைத்து பேசினார். அடுத்த மாதம் வழக்கு தொடரப்பட உள்ளது.

மம்தா மோகன்தாஸ் தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்துள்ளார். தற்போது 6 மலையாள படங்களில் நடிக்கிறார்.

இவருக்கும் கேரள தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும், கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக இருப்பதாக கூறிவந்தார். மம்தா மோகன்தாஸ் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு பிறகு குணமானார். கணவர் பிரஜித் தந்த தைரியத்தாலேயே புற்று நோயை தைரியமாக எதிர் கொண்டு மீண்டேன் என்றும் கூறிவந்தார்.

ஆனால் தற்போது திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஒரு வருடத்திலேயே முறிவு ஏற்பட்டு உள்ளது. கணவரை விவாகரத்து செய்ய மம்தா மோகன்தாஸ் முடிவு செய்துள்ளார். இதையடுத்து வக்கீல்களை வீட்டுக்கு அழைத்து கோர்ட்டில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்தார்.

இன்னும் ஓரிரு வாரத்தில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ப்படுகிறது. விவாகரத்துக்கு பிரஜித் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை. அவரும் மம்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum