தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேசியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது

Go down

மலேசியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது Empty மலேசியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது

Post  ishwarya Fri Mar 29, 2013 2:55 pm

மலேசியா பிரதமர் டாக்டர் மஹாதீர் பின் முகமது பிறந்த நாள் விழா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. அதில் இந்தி நடிகர் ஷாருக்கான் (47) கலந்து கொண்டார்.

அங்கு அவருக்கு ஆசிய பசிபிக் நிறுவன அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்தி பட உலகில் சாதனை படைத்ததற்காக அவருக்கு இவ்விருது கொடுக்கப்பட்டது.

இந்த விருதை அறக்கட்டளை நிறுவனர் தைலோ ராபர்ட்லோ, பிரதமர் டாக்டர் மஹாதீர் பின் முகமது ஆகியோர் அவருக்கு வழங்கினர். இந்த விருது பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் எனக்கு கவுரவம் கிடைத்துள்ளது என்று ஷாருக்கான் தெரிவித்தார்.

இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், ரத்தன் டாடா, ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட பலர் இந்த விருது பெற்றுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum