தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதுவையில் நடந்த படப்பிடிப்பில் நடிகை லட்சுமிராயிடம் ரசிகர்கள் அத்துமீறல்: மேலாடை கிழிந்தது

Go down

புதுவையில் நடந்த படப்பிடிப்பில் நடிகை லட்சுமிராயிடம் ரசிகர்கள் அத்துமீறல்: மேலாடை கிழிந்தது Empty புதுவையில் நடந்த படப்பிடிப்பில் நடிகை லட்சுமிராயிடம் ரசிகர்கள் அத்துமீறல்: மேலாடை கிழிந்தது

Post  ishwarya Fri Mar 29, 2013 2:35 pm

புதுவை குரும்பாபட்டு பாண்லே பால் பண்ணை அருகே ‘ஒன்பதுல குரு’ சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனை இயக்குனர் செல்வகுமார் இயக்கி வருகிறார். இதில் நடிகர் வினய், நடிகை லட்சுமிராய் நடிக்கின்றனர். நேற்று பாடல்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.

நடிகர் வினய், நடிகை லட்சுமிராய் ஆகியோருடன் 50 நடன கலைஞர்கள், கவர்ச்சி உடையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். படிப்பிடிப்பினை காண புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். பாடல் படப்பிடிப்பு காட்சியின் இடைவேளையில் அவர்களில் சிலர் நடிகை லட்சுமிராயிடம் ஆட்டோ கிராப் கேட்டனர். அவர்களுக்கு அவர் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அப்போது ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு அவர் மீது விழுந்தனர். அதில் சிலர் அவரிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் நடிகை லட்சுமிராய் அதிர்ச்சியடைந்தார்.

ரசிகர்களிடம் இருந்து மீண்டு வெளியில் வர அவர் முயற்சித்த போது அவருடைய மேலாடை கிழிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு குழுவினர் விரைந்து வந்து ரசிகர்களிடம் இருந்து அவரை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பு தளத்தில் லட்சுமிராயிடம் அத்துமீறிய ரசிகர்கள்
» சிங்கப்பூரில் 10,000 தமிழ் ரசிகர்கள் முன் பிரமாண்டமாக நடந்த மாற்றான் இசை வெளியீடு!
»  படப்பிடிப்பில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்
» அஜீத் படப்பிடிப்பில் ரசிகர்கள் கூடியதால் பதற்றம்
» விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை… கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum