தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிரிக்கெட் வீரர் ஆக ஆசைப்பட்டேன்! விஷ்ணு பேட்டி!!

Go down

கிரிக்கெட் வீரர் ஆக ஆசைப்பட்டேன்! விஷ்ணு பேட்டி!! Empty கிரிக்கெட் வீரர் ஆக ஆசைப்பட்டேன்! விஷ்ணு பேட்டி!!

Post  ishwarya Fri Mar 29, 2013 2:23 pm

நான் கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும்; இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன், ஆனால் நடி‌கராகிவிட்டேன் என்று நடிகர் விஷ்ணு கூறியுள்ளார். வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. சமீபத்தில் வெளியான நிர்ப்பறவை படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு உண்மையில் கிரிக்கெட் மீதுதான் உயிர். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுதான் அதிகம். ஏனோ சரியாக அமையவில்லை. அதன் பின்தான் சினிமாவுக்கு வந்தேன். வீட்டில் பெரிய கஷ்டம் இல்லை. கேட்டதெல்லாம் கொடுக்கிற வீடுதான். ஆனாலும் சினிமாவில் மட்டும் இடம் கிடைக்கவில்லை. தொடர் முயற்சிகள், சினிமா சம்பந்தமான ஆள்களுடன் சந்திப்புகள் என நாள்கள் கடந்து கொண்டே இருந்தது. சினிமா அவ்வளவு பெரிய விஷயமாக இருந்தன.

அதனாலேயே நிச்சயம் இதில்தான் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். அப்போதுதான் இயக்குநர் சுசீந்திரன் சார் அழைத்து வெண்ணிலா கபடி குழு வாய்ப்பு தந்தார். நல்ல படம், எனக்கான நல்ல அடையாளத்தை உருவாக்கி தந்தது. கதைதான் ஹீரோ என்பதை நம்புகிற அளவுக்கு படம் பார்த்தவன் நான். சினிமாவுக்கு வந்த பின்பும் அதுதான் நிஜ சினிமாவாக இருக்கும் என எண்ணினேன். சினிமாவுக்கு வந்த வேகத்தில் இந்நேரம் 15 படங்களை கடந்திருக்கலாம். அது தேவை இல்லை. நான் பெரிய அழகன் இல்லை. மற்ற ஹீரோக்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு நான் பலசாலியும் இல்லை. எனக்கான இடம் ஒன்று இருக்கும். அதற்கு போராடிக்கொண்டு இருக்கிற சின்ன பையன் நான், என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பேட்டி: கோவை கல்லூரி மாணவியை சிறுவாணி கதாநாயகியாக்க ஆசைப்பட்டேன்
» டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பேட்டி: கோவை கல்லூரி மாணவியை சிறுவாணி கதாநாயகியாக்க ஆசைப்பட்டேன்
» கிரிக்கெட் வீரர் கங்குலி சினிமாவில் நடிக்கிறாரா?!
» பிரகாஷ்ராஜின் படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி?
» “நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum