விபசார வழக்கு போடுவதாக மிரட்டினார்கள்! ரஞ்சிதா தகவல்!!
Page 1 of 1
விபசார வழக்கு போடுவதாக மிரட்டினார்கள்! ரஞ்சிதா தகவல்!!
வீடியோவை காட்டி விபசார வழக்கு போடுவதாக மிரட்டினார்கள், என்று நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார். சாமியார் நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டில் ஏற்றுவேன். சிறு வயதிலேயே எனக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதுவே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செல்ல தூண்டியது. நடிகர், நடிகைகள் பலர் ஆன்மீகத்தில் ஈடுபாடு வைத்துள்ளனர். ரஜினிகாந்த் ஆன்மீகவாதியாக இருக்கிறார். நடிகர் சந்தானம், நடிகை கவுசல்யா போன்றோரும் ஆசிரமத்துக்கு அடிக்கடி வருகிறார்கள். எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும். சி.டி. விவகாரத்துக்கு பிறகு முன்பைவிட அதிக பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். நித்தியானந்தா தற்போது வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஜனவரி 6-ம் தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் நடக்கும், என்று ரஞ்சிதா கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. வக்கீல் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் இல்லை சி.பி.ஐ. தகவல்
» நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
» விபசார விடுதி சுற்றிவளைப்பு! 13 பெண்கள் கைது!
» பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை!
» விபசார வழக்கில் கைதான நடிகைகள் சைராபானு, ஜோதிக்கு நடிக்க தடை
» நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
» விபசார விடுதி சுற்றிவளைப்பு! 13 பெண்கள் கைது!
» பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை!
» விபசார வழக்கில் கைதான நடிகைகள் சைராபானு, ஜோதிக்கு நடிக்க தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum