தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னும் 10 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பேன் -திரிஷா

Go down

இன்னும் 10 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பேன் -திரிஷா Empty இன்னும் 10 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பேன் -திரிஷா

Post  ishwarya Fri Mar 29, 2013 1:06 pm

திரிஷாவின் ‘சமர்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதில் முதல் தடவையாக விஷாலுடன் நடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் ‘பூலோகம்’ படத்திலும் ஜீவாவுடன் ‘என்றென்றும் புன்னகை’ படத்திலும் நடிக்கிறார்.

தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டது. காலண்டரை பார்க்கும் போதுதான் இவ்வளவு நாள் ஆனதை உணர்கிறேன். மற்றபடி நேற்று தான் நடிக்க வந்தது போல் இருக்கிறது. தினமும் புதுசாக நடிக்க வந்ததை போலவே நினைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு செல்கிறேன். பத்து வருடம் சினிமாவில் நிலைத்து இருப்பது பெரிய விஷயம். இன்னும் பத்து வருடங்கள் சினிமாவில் நீடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இனி மேல் வழக்கமான பாணியில் நடிக்க மாட்டேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிப்பேன். அதற்கான கதைகளையே தேர்வு செய்கிறேன். தற்போது தெலுங்கில் ஒப்பந்தமாகியுள்ள ‘ரம்’ படம் அத்தகு வலுவான கேரக்டரை கொண்டது. எனக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற கதையம்சம் உள்ள படம். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் என்னை பார்க்கலாம்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum