தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!!

Go down

ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!! Empty ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!!

Post  ishwarya Fri Mar 29, 2013 12:32 pm

தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் எனும் பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் டாக்டர் சீனிவாசன். லத்திகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சீனிவாசன், இப்போது ஆனந்த தொ‌ல்லை, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா பொங்கல் விருந்தாக வர இருக்கிறது. சந்தானம், பவர்ஸ்டார், சேது ஆகி‌ய மூவரும் விஷாகா சிங்கை விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். கடைசியில் விஷாகா யா‌ருடைய காதலை ஏற்றுக்கொண்டார் என்பதை முழுக்க முழுக்க ‌காமெடியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் மணிகண்டன்.

இப்படம் பற்றி சீனிவாசன் தினமலருக்கு அளித்த பேட்டியில், இப்படத்தின் டைரக்டர் மணிகண்டன் எனது லத்திகா படத்தின் 250-வது நாள் போஸ்டரை பார்த்து உடனே சந்தானத்தை தொடர்பு கொண்டு என்னை சந்திக்க வந்தார். இப்படத்தில் நடிக்கும் படி இருவரும் கேட்டனர். நானும் கதையை கூட கேட்காமல் உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படமும் நன்றாக வந்து இருக்கிறது. தற்போது ஷங்கரின் ஐ படம் உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறேன். ஷங்கர் சாருடன் நான் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதை அவரிடம் சொல்ல பயம். திடீரென ஷங்கரே வந்து அண்ணே உங்களுடன் நான் போட்டோ எடுத்து கொள்ளலாமா என்று கேட்டார். எனக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது என்றார்.

தமிழில் த்ரிஷா, சமந்தா, அனுஷ்கா போன்ற நடிகைகளில் எந்த நடிகையுடன் உங்களுக்கு நடிக்க ஆசை என்று கேட்டபோது, அவர்கள் யாரையும் எனக்கு பிடிக்கவில்லை. அவர்களுடன் நடிக்கும் ஆசையும் இல்லை. ஆனால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அதுதான் எனது ஆசை என்கிறார். அவருக்கு கல்யாணம் நடந்து குழந்தையெல்லாம் பிறந்துவிட்டது என்று கேட்டபோது குழந்தை பிறந்தால் என்ன, அவர் உலக அழகி. அவருடன் நடிக்க வேண்டும் என்கிறார் பிடிவாதமாக…!

ஆச.. ஆச…!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum