தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் இயற்கையாகவே காமெடியான ஆள்! உதயநிதி

Go down

நான் இயற்கையாகவே காமெடியான ஆள்! உதயநிதி Empty நான் இயற்கையாகவே காமெடியான ஆள்! உதயநிதி

Post  ishwarya Thu Mar 28, 2013 5:21 pm

நான் இயற்கையாகவே காமெடியான ஆள்தான், என்று நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் கடந்த வருடம் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடியது. தற்போது கதிர்வேலன் காதலி என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பிரபாகரன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் ரிலீசாகி ஹிட்டான சுந்தர பாண்டியன் படத்தை இயக்கியவர். இதில் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மீண்டும் கதாநாயகனாக நடிப்பது குறித்து உதயநிதி கூறுகையில், எனக்கு பொருத்தமான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். என்னால் எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க இயலுமோ அதில்தான் நடிக்க விரும்புகிறேன். நகரத்தில் இருந்து மதுரை செல்லும் ஒரு இளைஞனை பற்றிய கதையே இப்படம். நான் இயற்கையாகவே காமெடியான ஆள். நன்றாக காமெடி வரும். எனவேதான் காமெடி கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன், என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum