சனி தோஷம் விலக அகத்தியர் பாடல்
Page 1 of 1
சனி தோஷம் விலக அகத்தியர் பாடல்
கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே
தானேறி நின்று கொண்டு தலைகால் வேறாய்
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி
கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று
கரையேற வொட்டாமல் கருதுவானே
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
சுருதி பொருளானதொரு நாதன்பாதம்
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து
பாங்குடளே ஓம் கிலி சிவவென்று சொல்லே
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி ``ஓம் கிலி சிவ'' என்ற மந்திரத்தை 128 முறை செபிக்கவும். இப்படி ஒரு மண்டலம்- 48 நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும். இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சனி தோஷம் விலக அகத்தியர் பாடல்
» சனி தோஷம் விலக.......
» ராகு தோஷம் விலக....
» அகத்தியர் அகத்தியர்
» இறப்பு தோஷம் விலக பரிகாரம்
» சனி தோஷம் விலக.......
» ராகு தோஷம் விலக....
» அகத்தியர் அகத்தியர்
» இறப்பு தோஷம் விலக பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum