தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அகத்தியர் அகத்தியர்

Go down

அகத்தியர் அகத்தியர் Empty அகத்தியர் அகத்தியர்

Post  amma Sat Jan 12, 2013 6:25 pm



அகத்தியர் தோற்றம் பற்றி புராணங்களில் பல விதமாக கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி முதலியவர்களுடன் பூமிக்கு வந்தான். இவர்களை கண்ட அரக்கர்கள் கடலில் ஒளிந்தனர். அரக்கர்களை கொல்ல கடல் நீரை வற்ற செய்யுமாறு இந்திரன் அக்கினிக்கு கட்டளையிட்டான்.

ஆனால் கடல் நீரை வற்ற செய்தால் உலகத்தில் உள்ள அனைத்து நீர் வளங்களும் சுவறி விடும் என கூறி அவனை சமாதானம் செய்தார் அக்கினி. மறுபடியும் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்தது. கோபம் கொண்ட இந்திரன் அக்கினியை பார்த்து `` நீ சும்மா இருந்ததால் தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டது.அன்றே கடலை வற்ற செய்திருந்தால் இந்நேரம் இத்துன்பங்கள் ஏற்பட்டிருக்காது.

ஆகவே நீ வாயுவுடன் கூடிய பூமியில் போய் கும்பத்திற்கு பிறந்து கடல்நீரெல்லாம் குடிக்க கடவாய்'' என்று சாபமிட்டான். இந்திரனின் சாபப்படியே அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார். பூமியில் கடற்கரையருகே மித்திரா என்பவரும் வருணர் என்பவரும் தங்கியிருக்கும் பொழுது இந்திரன் சாபத்தால் பூலோகத்திற்கு வந்த ஊர்வசியை இவர்கள் கண்டனர்.

ஊர்வசியின் அழகில் மனதை பறிகொடுத்த இருவரும் மிக காமம் கொண்டு தவித்தனர். இதன் காரணமாக ஒருவர் தம்முடைய வீரியத்தை குடத்தி லிட்டார். மற்றொருவர் தண்ணீரில் விட்டார். குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிட்டரும் தோன்றினர். குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் கும்ப யோனி குடமுனி என்னும் பெயர்களை பெற்றார்.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் மீண்டும் வருத்த ஆரம்பித்து கட லுள் ஒளிந்து கொண்டனர். இந்த முறை அகத்தியர் தேவேந்திரன் வேண்டு கோளுக்கிணங்கி சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட அசுரர்களை இந்தி ரன் அழித்தான்.அதன்பின் நீரை பழையபடி கடலுள்விடுத்தார். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே 12 ஆண்டுகள் கடுந்தவமியற்றி பல அரிய சக்திகளை பெற்றார்.

கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது மக்கள் பாரம் தாங்காமல் வட திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை வட திசையினின்று தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். சித்த வைத்தியத்திற்கு அகத்தியர் செய்த பணி அளவிடற்கரியது.

இன்றைய மருத்துவ அறிஞர்களும் விடை காண முடியாது தவிக்கும் பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெள்ளத் தெளிவாக அகத்தியர் விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகி உள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது.

அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்ற நூலில் கிரிகை நூல் 64 என்ற பகுதியில் பதினெட்டு வகையாக மனநோய் பற்றியும் அவற்றின் இயல்புகளை பற்றியும் அவற்றுக்குரிய மருத்துவ முறைகளை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். அகஸ்தியர் அஷ்டமாசித்து என்னும் நூலில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

அகத்தியர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய சீடர்களும் அபிமானிகளும் அகத்தியர் எனறே பெயர் வைத்துக்கொண்டு வைத்தியம் செய்தனர். நூல்களையும் இயற்றினர். பிற்காலத்திலும் பலர் அகத்தியர் என்ற பெயரால் நூல்களை இயற்றி சேர்த்து விட்டனர். அகத்தியர் தாம் வடக்கே இருந்து கொண்டு வந்த ஆயுர் வேதத்தை தமிழ் சித்தர்களின் மருத்துவத்தையும் ஒன்று கலக்க முயன்றதால் ஒரே நோய்க்கு பல வித சிகிச்சை முறைகளை கூற வேண்டி இருந்தது.

முரண்பட்ட கருத்துக்களும் தோன்றின. அகத்தியர் அனந்த சயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாக கூறுகின்றனர். அகத்தியரை வழிபடும்போது குத்து விளக்கில் இரு முக தீபமேற்றி வணங்க வேண்டும்.

படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு, அல்லது வெள்ளியினால் ஆன உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது. பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரை பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து புதன்கிழமை பூஜை செய்யவும்.

நிறைவாக ``ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி''என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும். அகத்தியரை தினமும் வழிபட்டு வந்தால் இசையிலும், கவிதையிலும் மேன்மை உண்டாகும். கல்வித்தடை நீங்கும். புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கி நற்பலன் கிடைக்கும்.

முன்வினை பாவங்கள் அகலும். பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.பேரும், புகழும் மதிப்பும் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். சகல விதமான நோய்களும் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.*
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum