தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கத்தை விட பிளாட்டினம் நகைகளே பிடிக்கும் -நயன்தாரா

Go down

தங்கத்தை விட பிளாட்டினம் நகைகளே பிடிக்கும் -நயன்தாரா Empty தங்கத்தை விட பிளாட்டினம் நகைகளே பிடிக்கும் -நயன்தாரா

Post  ishwarya Thu Mar 28, 2013 4:24 pm

நடிகர் அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா இப்படத்துக்கு வலை என பெயரிட்டுள்ளனர். விஷ்ணு வர்த்தன் இயக்குகிறார். இந்த படத்தில் நீச்சல் உடையில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பில்லா படத்தில் நீச்சல் உடையில் வந்தார். அதைவிட கூடுதலாக இதில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சி காட்டுவதாக கூறப்படுகிறது.

சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவே இந்த தாராள கவர்ச்சி என்கின்றனர். நயன்தாரா நகைகள் அணிவதில்லை. ஐதரா பாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா அளித்த பதில் வருமாறு:-

தங்கம் பெண்களுக்கு பிடித்தமானது. ஆனால் எனக்கு அதில் ஆசை கிடையாது. தங்க நகைகள் அணிவது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் பிளாட்டினம் பிடிக்கும். பிளாட்டினம் நகைகளை அவ்வப் போது அணிவது உண்டு. அது எளிமையை பிரதிபலிக்கும். தங்க நகைகள் அணியா விட்டாலும் கூட விரல்களில் தங்க மோதிரம் அணிவதில் ரொம்ப விருப்பம் உண்டு.

விரல்களில் எவ்வளவு வேண்டுமானாலும் மோதிரங்கள் அணிவேன். என்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். நான் நடித்த படங்கள் ஹிட்டாகும் போது உறவினர்கள் எனக்கு மோதிரம் வாங்கி கொடுப்பார்கள். வீட்டில் விதம் விதமாக நிறைய மோதிரங்கள் வைத்துள்ளேன். டிரெஸ்சுக்கு ஏற்ற மாதிரி மோதிரங்கள் அணிவேன். கைவிரல்கள் அனைத்திலும் மோதிரம் அணிவ தென்றாலும, எனக்கு சம்மதம்.

இவ்வாறு நயன்தாரா கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum