தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருச்சியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜவுளிக்கடை அதிபர் விபத்தில் பலி

Go down

திருச்சியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜவுளிக்கடை அதிபர் விபத்தில் பலி Empty திருச்சியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜவுளிக்கடை அதிபர் விபத்தில் பலி

Post  meenu Thu Mar 28, 2013 2:34 pm

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 58). இவர் நாகர்கோவிலில் ஜவுளிக் கடை வைத்து நடத்தி வந்தார். முகமதுபஷீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து உடல்நிலை சீரானதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது திருச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வேனில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர். முகமது பஷீருடன் அவரது மனைவி சம்சுநிஷா (52), இவர்களது மகள் மற்றும் சம்சுநிஷாவின் அக்கா மகன் அமிர்தீன் (40) ஆகியோர் வேனில் புறப்பட்டு வந்தனர். வேனை அமிர்தீன் ஓட்டினார்.

நேற்று மாலை வேன் திருச்சி மாவட்டம் வளநாடு சொரியம்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்ற போது திடீரென்று வேனின் டயர் வெடித்தது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டது. இதில் வேனில் வந்த அனைவரும் படுகாயமடைந்து அபயகுரல் எழுப்பினர்.

இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகமது பஷீர் உயிரிழந்தார். சம்சு நிஷா, அமிர்தீன் ஆகிய இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வளநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிகிச்சை முடிந்தது – வீடு திரும்பினார் மனீஷா கொய்ராலா
»  ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம். இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி
» திருச்சியில் துணிகரம் 122 பவுன் நகை
» திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு
» திருச்சியில் "எஸ்.பி.பி. 1980': இன்னிசை நிகழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum