திருச்சியில் துணிகரம் 122 பவுன் நகை
Page 1 of 1
திருச்சியில் துணிகரம் 122 பவுன் நகை
திருச்சி உறையூரில் அடுத்தடுத்த வீடுகளில் புகுந்து 122 பவுன் நகை மற்றும் ரூ.6½ லட்சம் ரொக்கப்பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சியில் துணிகர கொள்ளை
திருச்சி மாநகர பகுதிகளில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதுவரை கொள்ளை நடந்த பெரும்பாலான வீடுகளில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் கொள்ளையர்கள் தங்கள் அட்டூழியத்தை தொடங்கி விட்டனர். திருச்சி உறையூரில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 122 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது. அது பற்றிய விபரம் வருமாறு:–
பைனான்ஸ் அதிபர்
திருச்சி வயலூர்ரோடு சீனிவாசநகர் 7–வது குறுக்குதெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 46). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது நள்ளிரவில் இவருடைய வீட்டின் பின்புறம் இருந்த காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
57 பவுன் நகை–ரூ.2½ லட்சம் ரொக்கம்
வீட்டின் பின்வாசலில் இருந்த ஜன்னல்கம்பியை நெம்பி அதில் இருந்த ஸ்குருவை ஒவ்வொன்றாக கழட்டி ஜன்னலை வளைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 57 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இதையடுத்து அங்கு இருந்த 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டுப்புடவைகளையும் அள்ளி சென்றனர்.
இதற்கிடையே வெளியூர் சென்று இருந்த செந்தில்குமார் நேற்று அதிகாலை 6 மணிக்கு மீண்டும் வீடு திரும்பினார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பொருட்கள் கலைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கைரேகை நிபுணர்கள்
உடனடியாக இது குறித்து உறையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
பி.எஸ்.என்.எல். அதிகாரி
இந்த கொள்ளை நடந்த பக்கத்து தெருவிலும் மற்றொரு கொள்ளை நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
திருச்சி வயலூர்ரோடு கீதாநகரை சேர்ந்தவர் வெங்கட்ரமணி(வயது 60). இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.அதிகாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்று இருந்தார். நேற்று பகல் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்கேட்டில் இருந்த பூட்டு மாற்றப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
65 பவுன்– ரூ.4 லட்சம் கொள்ளை
அப்போது உள்பக்கம் இருந்த கதவை மர்ம நபர்கள் கடப்பாறையால் நெம்பி உள்ளே சென்று, வீட்டில் இருந்த 65 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4 லட்சம் ரொக்கப்பணத்தை அள்ளி சென்றது தெரியவந்தது. உடனடியாக வெங்கட்ரமணி இது குறித்து உறையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
ஒரே மாதிரியான கொள்ளை
திருச்சி வயலூர்ரோட்டில் அடுத்தடுத்த தெருவில் உள்ள வீடுகளில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 வீடுகளிலும் நடந்த இந்த துணிகர கொள்ளையில் மொத்தம் 122 பவுன் நகை, ரூ.6½ லட்சம் ரொக்கப்பணம், 7¾ கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போய் உள்ளது. இரு சம்பவங்களிலும் ஒரே கொள்ளையர்களே ஈடுபட்டு இருக்கலாம் என்றும், வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்ட பிறகே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்க கூடும் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூன்று பவுன் வரி
» திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு
» திருச்சியில் "எஸ்.பி.பி. 1980': இன்னிசை நிகழ்ச்சி
» தங்கம் விலை பவுன் ரூ.22,296
» திருச்சியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜவுளிக்கடை அதிபர் விபத்தில் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum