பட்ஜெட் உரைக்கு அ.தி.மு.க.கவுன்சிலர் கருத்து
Page 1 of 1

பட்ஜெட் உரைக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தபோது பட்டை நாமத்துடன் தி.மு.க. கவுன்சிலர்கள் ‘ஜால்ரா அடித்ததால், கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
பட்ஜெட் கருத்து
சேலம் மாநகராட்சியின் 2013–14–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை(பட்ஜெட்) மேயர் எஸ்.சவுண்டப்பன் நேற்று தாக்கல் செய்தார். அவர் உரையை வாசித்து முடித்ததும் துணை மேயர், நிதிநிலைக்குழு தலைவர் மாணிக்கம், எதிர்க்கட்சி தலைவர் புவனேசுவரி ஆகியோர் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தனர்.
நிதிநிலைக்குழு தலைவர் மாணிக்கம் கருத்து தெரிவிக்கையில், ‘‘மேயராக சவுண்டப்பன் ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆட்சியில் வைக்கப்பட்டு சென்ற ரூ.100 கோடி கடன் சுமையை சுமந்து கொண்டு சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருகிறார்‘‘ என்றார்.
அதற்கு எதிர்க்கட்சி தலைவர்(தி.மு.க.) புவனேசுவரி, 10–வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும் கொறடாவுமான தெய்வலிங்கம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ஒட்டு மொத்த அ.தி.மு.க. கவுன்சிலர்களும் எழுந்து தெய்வலிங்கத்தை பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதனால் மேயர் சவுண்டப்பன் ஆத்திரம் அடைந்தார்.
மேயர் இறுதி எச்சரிக்கை
பட்ஜெட் உரையின் மீது கருத்து தெரிவிக்கும்போது யாராக இருந்தாலும் எதிர்த்து பேசக்கூடாது. உங்கள் முறை வரும்போது உங்கள் கருத்தை தெரிவியுங்கள். தயவுசெய்து இறுதியாக சொல்கிறேன். தேவையில்லாமல் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது பட்ஜெட் தொடர்பான கூட்டம். சபையில் நாகரீகம் தெரியாமல் சின்ன குழந்தையாட்டம் பேசக்கூடாது என மேயர் தெரிவித்தார்.
அப்போது தி.மு.க. கவுன்சிலர் தெய்வலிங்கம், ‘பட்ஜெட்டுக்கு சம்பந்தமில்லாமல் பேசினால் குறுக்கீடத்தான் செய்வோம்’ என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் புவனேசுவரி பேசினார். அதன் பின்னர் சூரமங்கலம் மண்டலக்குழு தலைவர் தியாகராஜன் பேசினார். அப்போது அவர் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
தி.மு.க.வினர் ‘ஜால்ரா‘
அப்போது ஒட்டுமொத்தமாக எழுந்த தி.மு.க. கவுன்சிலர்கள் புவனேசுவரி, தெய்வலிங்கம், சரளா, முருகன், தாஜூதின், கபீர், விஜயா, செல்வி ஆகியோர் கையில், ‘‘ஜால்ரா‘‘ அடித்தனர். மேலும் பட்டை நாமம் இட்ட அட்டையினை கழுத்தில் போட்டுக்கொண்டனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டை நாம அட்டையை பிடுங்கி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதை கிழித்து எறிந்தனர்.
நீங்கள் இதுவரை மத்திய அரசுக்கு ‘ஜால்ரா’ அடித்தீர்கள். தற்போது கூட்டணியில் இல்லை என்றதும் எதற்குதான் ‘ஜால்ரா’ அடிப்பது என தெரியாமல் அடிப்பதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூச்சலுக்கு இடையேயும் ருசிகரமாக பேசினார்கள்.
கூண்டோடு வெளியேற்றம்
அப்போது ஆவேசம் அடைந்த மேயர் சவுண்டப்பன், ‘‘சபை கட்டுப்பாட்டை மீறி யார் நடந்து கொண்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சபையில் அநாகரீகமாக நடந்து கொண்ட தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிடுகிறேன்‘‘ என்றார்.
அதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் அரங்கை விட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். வெளியில் படிக்கட்டில் இறங்கி வரும்போதும் 8 கவுன்சிலர்களும் ஜால்ரா அடித்துக்கொண்டே வந்தனர்.
பட்ஜெட் புத்தகம் கிழிப்பு
பின்னர் மாநகராட்சி வளாகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் பட்ஜெட் புத்தகத்தை கிழித்து எறிந்தனர்.
அதே வேளையில் மாமன்ற கூட்ட அரங்கில் தொடர்ந்து பட்ஜெட் மீது கருத்து தெரிவித்து கவுன்சிலர்கள் பேசினார்கள். அப்போது பேசிய மேயர் சவுண்டப்பன், ‘‘தி.மு.க. கவுன்சிலர்களும் மாநகராட்சியில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு ஆதரவாகவே ‘ஜால்ரா‘ அடித்து கொண்டு சென்றுள்ளனர். இதையும் பத்திரிகையாளர்கள் பதிவு செய்யலாம்‘‘ என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டேம் 999 தடை குறித்த ஆளுநர் உரைக்கு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு
» திண்டுக்கல் கோர்ட்டு அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீச்சு
» எந்திரனின் இப்போதைய பட்ஜெட்
» எந்திரனை மிஞ்சுகிறதா ஐ பட பட்ஜெட்
» இந்தியாவில் ரயில் பட்ஜெட் தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum