தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாரதிராஜாவின் அறிக்கை

Go down

இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாரதிராஜாவின் அறிக்கை Empty இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாரதிராஜாவின் அறிக்கை

Post  ishwarya Thu Mar 28, 2013 1:43 pm

தமிழ் திரையுலயம் தயங்கித் தயங்கி ஓரிரு வார்த்தைகளில் ஐ சப்போர்ட் கமல் என்று பம்மிய நேரத்தில் துணிந்து கமலுக்கு ஆதரவாக விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா. அந்த அறிக்கையியின் விவரம்…

என் இனிய தமிழ் மக்களே…

ஒரு கலைஞன் என்பவன் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சுறுதியோடுஇ பாரதியைப் போல சமூக விழிப்புணர்வுக்காக போராடுபவன். எழுத்தாளராகட்டும்இ கவிஞராகட்டும்இ திரைப்பட கலைஞனாகட்டும்இ எந்த துறையின் விமர்சகனுமாகட்டும்இ ஒரு படைப்பாளியாக துணிச்சலுடன் தன் கருத்த பதிவு செய்பவனாக இருக்கவேண்டும். அதுதான் அன் பொது வாழ்வின் சமூகக் கடமை. பயந்து ஒளிபவன் படைப்பாளியாக எழுத்தாளனாக கலைஞனாக இருக்க முடியாது. ஆனால் தங்களை படைப்பாளிகள் கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா?

திரையுலகில் இத்தனை அமைப்புகள் இருந்தும் அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பதாலோ அல்லது தனிப்பட்ட மன மாச்சரியங்களாலோ யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

வயிற்று வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தொப்யுமங் என்று கூறுவர். இன்று கமல்ஹாசனுக்குத்தானே தலைவலிஇ வயிற்று வலி என்று நினைத்தால் நாளை நம்மில் ஒருவருக்கு இதே நிலை வரும் போது நிவாரணத்துக்கு யாரைத் தேடுவீர்கள் எங்கே போவீர்கள் டூ நமக்குள் ஒற்றுமை இல்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே.

இன்று விஸ்வரூபத்துக்கு வைத்த தடை தமிழ் கலைஞனாக உள்ள கமலுக்கு மட்டும் வைத்த தடை இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா கலைஞனுக்கும் படைப்பாளிக்கும் வைக்கப்பட்ட தடையாக கருதுகிறேன். சினிமா, நாடகம், எழுத்து, கவிதை சமூக விழிப்புணர்வுக்கு துணையாக இருக்க வேண்டும்.

கமல் என்ற தமிழ்க் கலைஞன் வியாபாரத்திற்காக தன்னை ஒரு போதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன் மூட நம்பிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் திரையுலகில் மீசை வைக்காத பாரதியார். அவன் இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று படம் எடுப்பானா?

ஒரு மத்திய அரசால் அமைபக்கப்பட்ட ஒரு தணிக்கை குழு. அதில் அங்கம் வகிக்கும் மத்திய அரசின் தணிக்கை அதிகாரி. அவருடன் பொது வாழ்வில் அக்கறை கொண்ட சில சமூக ஆர்வலர்கள் கொண்ட, ஒரு முஸ்லீம் அங்கத்தினர் உட்பட தணிக்கைக் குழு அங்கீகரித்த ஒரு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால் இந்த இந்திய அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை. இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண குடிமகனை கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.

தொலைக்காட்சியில் நொண்டிச்சாக்காக சிலர் சொல்கிறார்கள் படத்தில் பாட்டு அல்லை, காதல் காட்சிகள் இல்லை, காமெடி இல்லை, இது ஒரு ஆவணப்படமென்று சொல்கிறக்ர்கள். படம் பார்த்தவன் நான். தொழில்நுட்பத்திலும், கதை சொல்லும் விதத்திலும், உலக தரத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு படத்தால் உயர்ந்து நிற்கிறான் இந்த தமிழன் என்று சக கலைஞனாக பெருமைப்பட்டு வந்தவன் நான்.

ஒரு ஆவணப்படத்திற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து படமெடுக்க யாராவது முனைவார்களா என்ன?

உலகில் நடந்த நிகழ்வுகளை, பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை, வாழ்க்கையில் அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூடகமாக திரையில் சொல்வது ஒரு படைப்பாளியின் தார்மீகமான படைப்பு சுதந்திரம்.

தயவு செய்து சகோதரர்களே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தங்களை தவறக்க அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டாம். என்று தங்களை பணிவோடும் பண்போடும் பாசத்தோடும் கேட்டுக் கொள்கிறேன். யார் எந்த அடையாளங்களை கொண்டிருந்தாலும் இந்த மண்ணில் உள்ளவரை அவன் இந்தியனே.

ஒரு நல்ல கலைஞனை

ஒரு தமிழ் கலைஞனை

தமிழ்த் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.

என் இனிய தமிழ் மக்களே!

நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள்இ சிந்தித்துப் பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum