துப்பாக்கி துப்பாக்கி
Page 1 of 1
துப்பாக்கி துப்பாக்கி
நடிகர்கள்:
விஜய்,காஜல் அகர்வால்,சத்யன்,ஜெயராம்,வித்யூட் ஜாம்வால்,மனோபாலா.
இசை:
ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு:
சந்தோஷ் சிவன்
இயக்கம்:
ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிப்பு:
கலைப்புலி எஸ்.தாணு.
கதையின் கரு: தீவிரவாதிகளை களையெடுக்கும் ராணுவ அதிகாரி.
அம்மா, அப்பா, இரண்டு தங்கைகளுடன் மும்பையில் வசிக்கும் தமிழர், விஜய். ராணுவ அதிகாரியான அவர், விடுமுறையில் மும்பைக்கு வருகிறார். ஒரு பஸ்சை குண்டு வைத்து தகர்த்த தீவிரவாதியை அவர் துரத்திப் பிடிக்கும்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. 12 இடங்களில் குண்டு வைத்து நகரை துவம்சம் செய்ய ஒரு சதிகாரன் திட்டமிட்டு இருப்பதும், அதற்கு சராசரி மனிதர்களை அவன் எப்படி பயன்படுத்துகிறான்? என்பதும் தெரியவருகிறது. அந்த சதியை விஜய் எப்படி முறியடிக்கிறார்? என்பதே கதை.
கதைக்கு நூறு சதவீதம் பொருத்தமான ’டைட்டில்.’
மும்பை தமிழராக, ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அதிகாரியாக, காஜல் அகர்வாலுடன் காதல் ரகளை செய்பவராக, நண்பர் சத்யனுடன் சேர்ந்து காமெடி பண்ணும் நண்பராக, தீவிரவாதிகளை களையெடுக்கும் அதிரடி வீரனாக&விஜய் நவரச முகம் காட்டுகிறார். ராணுவ பின்னணியிலான கதைக்களம், அவர் வீடு கட்டி விளையாட வசதியாக இருக்கிறது.
காஜல் அகர்வாலை பெண் பார்த்துவிட்டு, நாகரீகமாக தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்வது; அடுத்த காட்சியிலேயே அவரை குத்து விளையாட்டில் சாம்பியனாக பார்த்ததும், திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பது என கலகலப்பூட்டுகிற விஜய், பஸ் குண்டு வெடிப்புக்குப்பின், அதிரடி ’ரூட்’டுக்கு திரும்புகிறார். கப்பலில் நடக்கும் ’கிளைமாக்ஸ்’ சண்டையில், சிலிர்க்க வைக்கிறார். இடையிடையே இந்தியில் வசனம் பேசி, வியக்க வைக்கிறார். கொஞ்சம் அசந்தால் வழுக்கி விடுகிற பளிங்கு பிரதேசமாக, காஜல் அகர்வால். அடேங்கப்பா, எவ்வளவு பெரிய கண்கள்! விஜய் காதலிப்பதற்கும், டூயட் பாடுவதற்கும் கண்ணுக்கு இதமாக கவர்ச்சி விருந்து அளிப்பதற்கும் அமர்த்தப்பட்ட ஒரு ஜாலி பொம்மை!
கதையோடு இணைந்த சத்யனின் ’காமெடி’ அங்கங்கே சிரிக்க வைக்கிறது. விஜய்யின் அறைக்குள் ஒரு பீரோவில் தீவிரவாதியையும், இன்னொரு பீரோவில் காஜல் அகர்வாலையும் பார்த்து விட்டு, சத்யன் மிரண்டு போகிற இடம், ஒரு உதாரணம். விஜய்யின் உயர் அதிகாரியாக வரும் ஜெயராம், காஜல் அகர்வாலை ஒருதலையாக நேசிப்பதும், அவர் விஜய்க்கு பெண் பார்ப்பதும் கூடுதலான நகைச்சுவை விருந்து.
’பில்லா-2’ வில்லன் வித்யூட் ஜாம்வாலை ஒரு அமைதி புயல் போல் காட்டி, மிரட்டியிருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜிடம் இன்னும் எதிர்பார்த்தோம். அவருடைய சுகமான ராகங்கள் எங்கே போனது? பாடல் காட்சிகளில், வெளிநாட்டின் அழகை எல்லாம் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது, சந்தோஷ் சிவனின் கேமரா.
யூகிக்க முடியாத திருப்பங்களுடனும், பதற்றத்தை ஏற்படுத்தும் காட்சிகளுடனும் படத்தின் முதல் பாதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசாக பறக்கிறது. இரண்டாம் பாதியில், காஜல் அகர்வால் வரும் சில காட்சிகள் நெளிய வைக்கின்றன. அம்மா, அப்பா, இரண்டு தங்கைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் விஜய், தீவிரவாதியை தனி அறையில் அடைத்து வைத்திருப்பதும், அவனுடைய விரலை வெட்டுவதும் குடும்பத்தினருக்கு தெரியாது என்று காட்டுவதை நம்பமுடியவில்லை.
விஜய்யை வில்லன் ஒவ்வொரு காராக மாற்றி ஓட்டிவர செய்வதும், ’கிளைமாக்ஸ்’சில் அதற்கு அவர் விளக்கம் கொடுப்பதும், முருகதாஸ் முத்திரை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» துப்பாக்கி தடை நீட்டிப்பு
» ‘துப்பாக்கி’ இசை வெளியீடு
» துப்பாக்கி - தொடருது தடை
» துப்பாக்கி தடை நீட்டிப்பு
» சிங்கத்தோட சேரும் துப்பாக்கி!
» ‘துப்பாக்கி’ இசை வெளியீடு
» துப்பாக்கி - தொடருது தடை
» துப்பாக்கி தடை நீட்டிப்பு
» சிங்கத்தோட சேரும் துப்பாக்கி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum