தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்

Go down

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் Empty பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்

Post  birundha Thu Mar 28, 2013 12:43 am

ஸ்தல வரலாறு....

ஈரோடு மாவட்டம் பாரியூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான கோயில் இது. இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமணபாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம், செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து பாதுகாத்து அருள்பாலிக்கிறார்.

அக்னிகுண்டம் இறங்குதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அம்மனுக்கு விளக்கு போடுதல் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாக இருக்கின்றன. லட்சார்ச்சனை, 1008 சங்காபிசேகம், பச்சை மா அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம் ஆகியவற்றைச் செய்யலாம்.

அம்மையை ஊஞ்சலில் அமரவைத்து பாடல்கள் இசைத்து ஊஞ்சல் ஆட்டலாம். பக்தர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 40 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள்.

காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். ஆண், பெண் சிறுவர், சிறுமியர் உடல் ஊனமுற்றவகள் மெத்தையில் நடந்து வருவது போல் தீ கங்கில் அம்மனை நினைத்து 40 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி வருவது ஆச்சர்யமாக இருக்கும்.

குண்டமே அம்மனின் பெயரோடு சேர்ந்து கொண்டத்து (குண்டம்) காளியம்மன் என்று வழங்கப்படுகிறது. அம்மனின் வலது கையில் ராம் வாக்கு உள்ளது. இடது கையில் உத்தர வாக்கு உள்ளது. அம்பாளிடம் தங்கள் பிரச்சினைகளுக்கு உத்தரவு கேட்பவர்கள் வலது கை வாக்கு கிடைத்தால் காரியத்தை தொடர்கின்றனர்.

இடது கை வாக்கு கிடைத்தால் நிறுத்தி விடுகின்றனர். ஆனால் வியாதிகள் குணமாவதற்கு இடது கை உத்தரவே பெரிதும் வேண்டப்படுகிறது. இத்தலத்தில் பிரம்மாண்ட வடிவில் உள்ள முனியப்ப சுவாமி மிகவும் அருள் வாய்ந்தவர். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்டு விட்டு முனியப்ப சுவாமிக்கு செவ்வாய் இன்று 12 குடம் தண்ணீர் ஊற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

தவிர முனியப்ப சுவாமியை வழிபடுவோர் பேய் பிசாசுத் தொல்லைகளில் இருந்து விடுபடுவர். இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள் பெற்ற சித்தர் சூரராசச் சித்தர் என்பவர்.

இவர் அம்மனின் அருள் பெற்றதோடு மந்திரசக்தி படைத்தவராக விளங்கினார். இவர் தம் மந்திரசக்தியின் திறனால் அன்னை காட்சி கொடுத்தாராம். திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் பட்டாரி என்னும் கோயில் இருக்கிறது. இதற்கருகில் இன்னும் சமாதி நிலையில் சித்தர் இருப்பதாக கருதப்படுகிறார்.

பாரியூர் கொண்டத்து காளியம்மன், நாட்டில் பஞ்சம் நிலவிய போதும் மக்களை காத்தவள் ஆவாள். அவளை வணங்கினால் தீயசக்திகள் அகன்று சர்வ சக்தியும் கைக்கூடும். இங்கும் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். கொண்டத்து காளியம்மன் கோவிலில் மந்திரித்த சிகப்பு கயிறு பக்தர்களுக்கு கட்டபப்டும். அது தீய சக்திகளை தடுத்து தொழிலில் சிறந்தோங்க செய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum