பச்சையம்மன்(சப்தகன்னி) கோயில்
Page 1 of 1
பச்சையம்மன்(சப்தகன்னி) கோயில்
ஸ்தல வரலாறு....
தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற்றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்கச் செய்பவை. கேட்கக் கேட்கத் திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது. இவற்றில் பச்சையம்மன் நிகழ்த்திய அதிசயங்கள் ஏராளம்.
1995-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம், அழகாபுரம், வயலூர் உட் பட பல கோவில்களில் சிலை திருட்டுகளும், உண்டியல் திருட்டுகளும் தொடர்ந்து நடந்தன. இதைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனி காவலர் படையும் திணறிக் கொண்டிருந்தது. சிலை தடுப்பு காவலர் சாமி சிலைகள் தயார் செய்யப்படும் கும்பகோணம் பகுதிக்குச் சென்று சிலை செய்பவர்களிடம், “சாமி சிலைகளை யாராவது விற்கவோ பரிசோதிக்கவோ இங்கு கொண்டு வந்தால் எங்களுக்கு உடனே தகவல் கொடுங்கள்” என்று சொல்லியிருந்தனர்.
அதே சமயத்தில் அழகாபுரம் என்ற ஊரில் சாமி சிலைகள் களவு போனது. அதில் அழகான பால முருகன் சிலையும் உண்டு. இந்த சிலையில் தங்கம் கலந்திருக்கிறதா என்று பரிசோதனை செய்ய ஒரு கும்பல் காரில் சிலையோடு கும்பகோணத்திற்குச் சென்றது. அங்கு சிலை செய்பவர்களிடம் கொடுத்து சோதித்து, தங்கம் இல்லை என்று தெரிந்ததும் சிலையோடு மீண்டும் அந்த கும்பல் புறப்பட்டது.
உடனே சிலை செய்பவர்கள் காவலருக்குத் தகவல் கொடுத்தனர். காரில் வந்த கும்பல் ஓலையூர் என்ற கிராமத்திலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். உடனே காவலர் புலன் விசாரணை செய்து, ஓலையூரைச் சேர்ந்த ஒரு பூசாரி தலைமையிலான ஏழு பேர் கொண்ட கும்பல்தான் சிலை, உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்தனர்.
உடனே காவலர்கள் மாறு வேடத்தில் ஓலையூர் பூசாரியிடம் சென்று, “நாங்களும் சிலை கடத்து பவர்கள்தான். வெளிநாடுகளுக்கு விற்க எங்களுக்கு அழகான சாமி சிலைகள் வேண்டும்” என்று சொல்ல, பூசாரி கும்பலும் நம்பி விட்டது. “கையில் இருக்கும் சிலைகள் சிதைந்தவை. அதனால் இரண்டு நாள் கழித்து வாருங்கள்.
உங்களுக்கு மிக அழகான சிலைகளைத் தருகிறோம்” என்று உறுதி கொடுத்தனர். காவலர்களும் திருடர்களுக்கு வலைவிரித்துப் பிடிக்கும் எண்ணத்தில் சென்று விட்டனர். ஏற்கெனவே பூசாரி கும்பல் காட்டின் நடுவே இருந்த குமாரை அம்மன் கோவிலை நோட்டம் பார்த்து வைத்திருந்தது.
அன்று மாலையே மூன்று பேர் சாக்குப் பைகளோடும், பூசாரி தன் மனைவியோடும் யாரும் சந்தேகப்படாதபடி ஓலையூரிலிருந்து குமாரைக்கு இரவோடு இரவாக சைக்கிளில் வந்தனர். கோவில் மதில் சுவரில் ஏறி உட்கதவின் பூட்டை உடைத்து, அங்கிருந்த விநாயகர், பச்சையம்மன், முருகன் ஆகிய மூன்று சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு, உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு ஓலையூர் சென்றுவிட்டனர்.
காவலர்கள் பூசாரி சொன்னபடி இரண்டு நாட்கள் கழித்து சிலை வாங்க வந்தனர். பூசாரி கும்பல் வைக்கோல் போரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குமாரை கோவில் சிலைகளை எடுத்துக் கொடுத்து விலை பேசும்போது, காவலர்கள் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்தனர்.
பூசாரி கும்பலிடம் விசாரணை செய்ததன் மூலம் திருட்டுப் போன மற்ற கோவில் சிலைகளையும் காவலர்கள் மீட்டனர். இந்த விஷயத்தை காவல் அதிகாரிகள் எங்கள் ஊருக்கே வந்து விளக்கிச் சொன்னதோடு, சிலைகளை ஒப்படைத்து,”உங்க ஊர் பச்சையம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.
இந்த அம்மனே திருடர்களைப் பிடிக்க எங்களுக்கு உதவி செய்ததுபோல் உள்ளது” என்று கூறி, மிகவும் சக்தி வாய்ந்த அம்மனை வழிபாடு செய்துவிட்டுச் சென்றனர்” என்கின்றனர்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» ஆரணி நகரை சுற்றிலும் 8 சப்தகன்னி கோவில்கள்
» தோஷங்கள் நீக்கும் ஆம்பூர் சப்தகன்னி கோவில் குளதீர்த்தம்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
» கோயில் கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum