தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஷ்டலட்சுமி கோவில்

Go down

அஷ்டலட்சுமி கோவில் Empty அஷ்டலட்சுமி கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 11:20 pm

ஸ்தல வரலாறு...

கடற்கரைக்கு அருகே, பிரம்மாண்டமாய் விரிந்திருக்கிறது கோவில். சக்தி வழிபாட்டில் ஒர் அம்சமாக லட்சுமியை முதன்மைப்படுத்தி அமைக்கப்பட்ட சிறப்புமிக்கத் திருக்கோயில் என்பது தனிச்சிறப்பு. சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே அஷ்டலட்சுமிகோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம்.

அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார். திருமண கோலத்தில் மகாலட்சுமி நாயகனுடன் நிற்கும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் முடியும் என்பது நம்பிக்கை.

தவிர வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் தருகிறார்கள் அஷ்டலட்சுமிகளும்.கோபுரம் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம்.

தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பைபெற்றதாக உள்ளது. அஷ்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

உடல்நலம்பெற ஆதிலட்சுமியையும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியையும், தைரியம் பெற தைரியலட்சுமியையும், சௌபாக்கியம் பெற கஜலட்சுமி யையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியையும், செல்வம் பெருக தனலட்சுமியை வணங்க வேண்டும்.

அஷ்ட இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை இங்கிருந்தே துவக்குவர்.

சில படிகள் ஏறி மூன்றாம் தளமடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விசயலட்சுமி வித்தியா லட்சுமி மற்றும் கசலட்சுமி சன்னதிகளைக் காணலாம். மேலேறினால் உள்ள நான்காம் தளத்தில் தனியாக உள்ள தனலட்சுமியைக் காணலாம். அட்டலட்சுமிகளைத் தவிர பத்து தசாவதார அவதாரங்களுக்கும் குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் சன்னதிகளும் உண்டு.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum