அஷ்டலட்சுமி தோத்திரம்
Page 1 of 1
அஷ்டலட்சுமி தோத்திரம்
நாரணன் பத்தினியாகிய திருமகளை வழிபட்டு உயர்ந்த தேவ உத்தமர்கள் பலர் அவர்கள் சொன்ன தோத்திரத்தால் மகிழ்ச்சி அடைந்த மகாலட்சுமி பொன்மணியும், பதவிகளும் கிடைக்கச் செய்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.
ஸ்ரீ மகாலட்சுமி தேவியை ஐஸ்வர்யத்தின் வடிவாக வழிபட்டவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்கிற எட்டு வாழ்க்கை நலன்களையும் பெற்றார்கள். பாரதியார் தன் பாடலில் "செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்'' என்றார். அந்த எட்டு ஐஸ்வர்யங்கள்:-
1. உயர் பதவி, தன் குறிப்பறிந்து அலுவலலைச் செய்யக் கூடிய நம் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்குத் தலைமை ஏற்கிற பொறுப்புடைய பதவி.
2. மக்கள் பெற்றவர்களுக்கு நல்ல புகழையும் பெயரையும் தேடித் தரக் கூடிய நண்மக்கள்.
3. சுற்றம்- தேவைப்படும் சமயத்தில் தேவையான உதவிகளைத் திரும்பவும் செய்ய எதிர்பாராமல் செய்யும் உறவினர்.
4. பொன்: நல்ல மார்க்கத்தில் சம்பாதித்து வைத்திருக்கும், நம்மை விட்டு நீங்காத செல்வம். நமக்குச் சமயத்தில் உதவக் கூடியது.
5. மணி: விலை மதிப்பு அதிகம் உடைய மற்றவர்கள் பார்த்து வியக்கும் பொருட்டு அழகான ஆடை அணிகலன்கள் பொன்மணிகள்.
6. நெல்: அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்படும் பொன் நிறமான பல்வகை தானியங்கள்.
7. வாகனம்: வழியில் தடைகளை ஏற்படுத்தாத விரைவான குதிரை முதல் தற்கால நான்கு சக்கர வாகனங்கள் வரை.
8. ஆட்கள்: நம் மனவிருப்பத்தை அறிந்து தாமே தேவையான வேலைகளைச் சரியான சமயத்தில் குறைவில்லாமல் செய்து முடிக்கக் கூடிய திறன் படைத்த பணி ஆட்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அஷ்டலட்சுமி தோத்திரம்
» ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரம்
» அஷ்டலட்சுமி திருக்கோவில்
» அஷ்டலட்சுமி கோயிலில் ஹோமம்
» பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி
» ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரம்
» அஷ்டலட்சுமி திருக்கோவில்
» அஷ்டலட்சுமி கோயிலில் ஹோமம்
» பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum