அஷ்டலட்சுமி திருக்கோவில்
Page 1 of 1
அஷ்டலட்சுமி திருக்கோவில்
எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.
உணவு வளம், உற்பத்திப் பெருக்கம் போன்றவற்றைக் கொடுத்தல், வயிறு தொடர்பான குறைகளை நீக்குதல் ஆகியவற்றுக்காக யானை வாகனத்தில் காட்சி தருபவள் தான்ய லட்சுமி. எந்தச் செயலுக்கும் மனத்துணிவு இல்லையெனில், செயலை நடைமுறைப் படுத்துவது கடினமாகும்.
அந்த எண்ணத்திற்கு வலுவூட்டுபவள் சிம்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் தைரிய லட்சுமி. கன்னிகை இருவர் உதவிபுரிய, கன்னிகை பீடத்தில் நன்னிலையில் அமர்ந்து அருள்பவள் சந்தான லட்சுமி! இவள் குழந்தைப்பேறு நல்கும் குணவதி. வெற்றியை நல்கும் வீரத் திருமகளாக அன்ன வாகனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்பவள் விஜயலட்சுமி.
கல்வியில் சிறக்க குழந்தைகளுக்கு அருளும் வகையில் சரஸ்வதி தேவியாக காட்சி தந்தவள், குதிரை வாகனத்தில் அமர்ந்து அருளும் வித்தியாலட்சுமியாகவும், சகல சவுபாக்கியங்களையும் குறைவின்றி நல்கும் வகையில், சவுபாக்கிய லட்சுமி என்னும் கஜலட்சுமியாகவும் காட்சி தருகிறாள்.
இடது கையில் கமண்டலம் தாங்கி, வலது கையில் வெற்றியை வைத்து, மனித வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழிபடுவோருக்கு அளிப்பவளே தனலட்சுமி. இந்த எட்டு வகை லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, மகாலட்சுமி எனும் வடிவில் திருமாலுடன் திருமணக் கோலத்தில் நல்கும் திருமண பிரார்த்தனைத் திருத்தலம் அஷ்டலட்சுமி திருக்கோவிலாகும்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவில் பெசன்ட் நகரில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி
» அஷ்டலட்சுமி கோயிலில் ஹோமம்
» பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி
» அஷ்டலட்சுமி கோவில்
» அஷ்டலட்சுமி தோத்திரம்
» அஷ்டலட்சுமி கோயிலில் ஹோமம்
» பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி
» அஷ்டலட்சுமி கோவில்
» அஷ்டலட்சுமி தோத்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum