தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தியானலிங்கத் திருக்கோவில்

Go down

தியானலிங்கத் திருக்கோவில் Empty தியானலிங்கத் திருக்கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 11:16 pm

கோவையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. சத்குரு ஜக்கிவாசுதேவால் இங்கு தியானலிங்க திருக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. 13 அடி 9 அங்குலம் உயரமுள்ள தியானலிங்கம் இங்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தியானலிங்கம் ஒரு மகத்தான அற்புதம். தியானலிங்க வளையத்திற்குள் வரக்கூடிய ஒவ்வொருவருக்குள்ளும் ஆன்ம விடுதலைக்கான விதை விதைக்கப்படுகிறது. தியானலிங்கம் எந்த மதத்துக் கும் சொந்தமில்லை. அதன் அதிர்வுகளை ஆன்ம பூர்வமாக உணர்வதற்கு கடவுள் நம்பிக்கை அவசியமில்லை.

இந்த உண்மையை உணர்த்தும் வகையில் 17 அடி உயரமுள்ள `சர்வதர்மஸ்தம்பம்' ஒன்று கோவில் வாசலிலேயே நிறுவப்பட்டுள்ளது. துணின் 3 பக்கங்களில் பல்சமய சின்னங்களும், மற்றொரு புறத்தில் மனித உடலில் உள்ள 7 சக்கரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. உச்சியில் ஒரு சூரிய முகமும் உண்டு.

தியானலிங்கத்தை தேடி வருபவர்களுக்குள் ஒரு புதிய உதயம் நிகழப் போவதை இது குறிக்கிறது. 76 அடி விட்டமும், 33 அடி உயரமும் உள்ள தியானலிங்க கருவறை செம்மண், செங்கல், சுண்ணாம்பு மற்றும் மூலிகைக் கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளது.

தியானம் செய்ய வருபவர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்காக 28 தவக்குகைகள் அமைந் துள்ளன. இங்கு தியானம் செய்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆன்மீகத்தில் மிக உயர்ந்த ஆனந்த நிலைகளை பெறுவதற்கான வழி பிறக்கும்.

நாத ஆராதனை....

தினசரி சந்தியா காலங்களாகிய காலை 11.50 முதல் 12.10 வரையிலும் மாலை 5.50 முதல் 6.10 வரையிலும் தியானலிங்க வளாகத்தில் நாத ஆராதனை நடைபெறுகிறது. இசைக்கருவிகளின் ரீங்காரம், வார்த்தைகளற்ற குரலிசை மற்றும் மத்தள ஓசை இவற்றைப் புனைந்து புதிய பரிமாணத்தில் நாத ஆராதனை அர்ப்பணிக்கப்படுகிறது.

நாதத்தின் துணை கொண்டு தியானலிங்கத்திலிருந்து வெளிவரும் அதிர்வுகளை மேலும் தீவிரத்தோடு பெற நல்வழியாகிறது நாத ஆராதனை. தியானலிங்கத் திருக்கோவில் எல்லா நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அதிர்வுகள்........

பொருளாதார முன்னேற்றம், உடல்நலம், சில, ஒவ்வாமைகளிலிருந்து விடுபடுதல் போன்ற வெவ்வேறு வாழ்வியல் தேவைகளுக்கும் தேடல்களுக்கும் துணை செய்யும் விதத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் தியானலிங்கத்திலிருந்து வெவ்வேறு அதிர்வுகள் வெளிப்படுகின்றன.

திங்கட்கிழமை - பூமி தத்துவம்:. மலட்டுத்தன்மை நீங்கவும், குழந்தைபேறு கிட்டவும் இந்த நாளில் தியானலிங்கத்தின் அதிர்வுகள் துணை நிற்கும். உடலிலுள்ள தோஷங்கள் நீங்கவும், மனபயம், பணபயம், மரண பயம் போன்றவற்றைப் போக்கவும் இந்நாளில் தியானலிங்கம் உதவுகிறது.

செவ்வாய்க்கிழமை - நீர் தத்துவம்:. உருவாக்கம், உற்பத்திக்கு உகந்தது. மன தூய்மை, மன உறுதி, விரும்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்தல், உறவுகளை வளர்த்தல் போன்றவற்றுக்கு தியான லிங்கம் உதவுகிறது.

புதன்கிழமை - நெருப்புத்தத்துவம்: பொருளாதார மேம்பாட்டுக்கும், உடல் நலம் சிறக்கவும் புதன்கிழமைகளில் தியானலிங்கம் துணை செய்கிறது. ஜீரணம் தொடர்பான கோளாறுகளிலிருந்து விடுபட இந்நாள் உகந்தது. குறிப்பாக நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த நாள் இது. தன்னம்பிக்கை வளரவும், உணர்வுகள் சமநிலை அடையவும், உடலுக்கும், மனதுக்கும் ஒத்திசைவு ஏற்படவும் தியானலிங்கம் வழிகாட்டுகிறது.

வியாழக்கிழமை - காற்றுத்தத்துவம்: இறையுணர்வில் தேடல் மிகுந்தவர்களுக்கு அன்புநிலை, பக்தி நெறி போன்ற மேம்பட்ட வாழ்க்கை முறைகளுக்கு வியாழனில் தியானலிங்கம் துணைபுரிகிறது.

வெள்ளிக்கிழமை - வான் தத்துவம்: இயற்கையோடு இணைந்த வாழ்வு, அகத்தூய்மை போன்ற உயர் பலன்களோடு சாபங்கள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து விடுபடவும் தியானலிங்கம் துணைபுரிகிறது. நினைவாற்றல், தன்னம்பிக்கை, பொறுமை போன்ற நற்பண்புகள் மேம்பட வெள்ளிக்கிழமை உதவுகிறது.

சனிக்கிழமை - மகாதத்துவம்:. ஐம்புலன்களைக் கடந்த பேரானந்தம் கிட்டுவதற்கு வழி செய்யும் அதிர்வலைகள் இந்நாளில் தியானலிங்கத்திலிருந்து வெளிப்படுகின்றன. ஞானம் பெறும் வேட்கை உள்ளவர்களுக்கும், உலகம் முழுவதையும் ஒன்றென உணரும் உள்ளம் கொண்டவர்களுக்கும் இந்நாள் மிகவும் சிறந்தது.

ஞாயிற்றுக்கிழமை: `தான்' என்னும் மாயையினைக் கடப்பதற்கும், குருவின் அருளைப் பெறுவதற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட பேரானந்தத்தை உணர்வதற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் தியானலிங்கம் நல்வழி காட்டுகிறது.

மகாசிவராத்திரி அறிவியல் அடிப்படையில், மகா சிவராத்திரி இரவில் உள்ள கோள்களின் அமைப்பின்படி முதுகுத்தண்டை நேர்பட வைக்கிறது. நம்மை இயல்பாகவே தியான நிலைக்கு எடுத்துச் செல்கிறது. அந்தச் சக்தி நிலையை ஆத்ம சாதனைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மகா சிவராத்திரி இரவு முழுவதும் சத்குரு முன்னிலையில் தீவிரமான தியானம், துடிப்புமிக்க கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய இசைக்கலைஞர்களின் இன்னிசை மற்றும் அன்னதானம் என வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரிக்கு முந்தைய 13 நாட்கள் `யக்ஷா' திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. அன்றைய நாட்களில் மாலை நேரங்களில் புகழ் பெற்ற கலைஞர்களின் நடனம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். நமது கலாச்சாரத்தின் பெருமையை பறைசாற்றும் விதங்களில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும்.

தீர்த்தகுண்டம்.......

தீர்த்த குண்டம் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நீர்நிலை ஆகும். தீர்த்தக்குண்டத்தின் மையமாக ரசலிங்கம் திகழ்கிறது. தன்னைச் சுற்றி ஆற்றல் வாய்ந்த சக்திமையத்தை உருவாக்குகிற ரசலிங்கம் கெட்டிப்படுத்தப்பட்ட பாதரசத்தால் ஆனது. தியான லிங்க கோவிலுக்குள் நுழையும் முன்னர், தீர்த்த குண்டத்தில் மூழ்கி எழுவது தியாலிங்கத்தின் ஆன்மீக அதிர்வுகளை பெறும் தன்மையை மேம்படுத்துகிறது.

பிரம்மாண்டமான கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்டு தாமிரத்தகடு பொருத்தப்பட்ட செல்வக வடிக தீர்த்த குண்டம், தியானலிங்க வளாகத்தின் வடதிசையில், நிலமட்டத்திற்குக் கீழ் 35 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இதற்கு நேர் மேலுள்ள அரைக்கோள வடிவக் கூரையில் இயற்கைச் சாயங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மஹாகும்ப மேளாவைச் சித்தரிக்கின்றன.

தீர்த்தகுண்டத்திலுள்ள சக்தியூட்டப்பட்ட தீர்த்தம் ஒருவரின் சக்தி நிலையை சமன் செய்கிறது. இதனால் ஒருவர் ஆன்மீக நலன்கள் மட்டுமின்றி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பெறமுடிகிறது. இத்தீர்த்தத்தின் புத்துயிரூட்டும் மற்றும் நோய் நிவாரணமளிக்கும் தன்மைகளால் நாட்பட்ட நோயால் துன்பப்படுபவர்களும் பலன் பெற முடியும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum