தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கைலாசநாதர் திருக்கோவில்

Go down

கைலாசநாதர் திருக்கோவில் Empty கைலாசநாதர் திருக்கோவில்

Post  amma Mon Jan 14, 2013 3:31 pm




ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ செல்ல வேண்டிய தலம் திருச்சி மாவட்டம் காருகுடி கைலாசநாதர் திருக்கோவில்.

தல வரலாறு:

சந்திர பகவான் 27 நட்சத்திர தேவியரில், கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திர தேவியை மணந்த போது, கைலாயத்தில் உள்ள சிவன் பார்வதியை தரிசிக்க விரும்பினார். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு இத் தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தார்.

இதனால் இத்தல இறைவன் கைலாசநாதர், அம்மன் கருணாகரவல்லி ஆனார்கள். கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதி நட்சத்திரத்தன்றும் இங்கு வருண ஹோமங்கள் செய்தால் கண்டிப்பாக மழை வரும் என்கிறார்கள்.

ரேவதி நட்சத்திர சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும், பார்வதியும் இத் தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது.

எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியான பொருட்களை (27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப் பொட்டலங்கள்) சிவனிடமும், அம்மனிடமும் சமர்ப்பித்து, கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரமும் தொடங்கும் முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நோய் தீர்க்கும் தலம்:

காசிக்கு அடுத்து காருகுடி என்பார்கள். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்தல இறைவனை வணங்கி கோவிலை பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும். நீர் சம்பந்தமான நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப் படுகிறது.

கோவில் அமைப்பு:

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்லில் ஓரி என்ற மன்னன் இக்கோவிலை புதுப்பித்து கட்டியுள்ளான். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசா லாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்திரர், கால பைரவர், சூரியன், சந்திரன், நவகிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

போக்குவரத்து வசதி:

திருச்சியில் இருந்து 61 கி.மீ. தூரத்தில் காருகுடி உள்ளது. திருச்சியில் இருந்து முசிறி (40 கி.மீ.) சென்று அங்கிருந்து தாத்தய்யங்கார்பேட்டை (21 கி.மீ.) சென்று பின் 5 கி.மீ. தூரத்தில் உள்ள காருகுடிக்கு வரலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையில் இருந்து திருச்சி சென்று பின் அங்கிருந்து முசிறி வழியாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி சென்று பின் அங்கிருந்து ஊள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலை அடையலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum