அருள்மிகு அரங்கநாதன் கோவில்
Page 1 of 1
அருள்மிகு அரங்கநாதன் கோவில்
ஸ்தல வரலாறு....
மூலவர் - இலட்சுமிநாராயணர்
தாயார் - ஸ்ரீதேவி, பூதேவி
புராணப் பெயர் - அரிகேசவநல்லூர்
மாவட்டம் - தேனி
மாநிலம் - தமிழ்நாடு
கருவறையில் லட்சுமி நாராயணர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சன்னதி அமைக்க முற்பட்டனர். அதற்காக சிலை வடித்து, சன்னதியும் எழுப்பப்பட்டது. சன்னதியில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் முன்பாக, பக்தர் ஒருவர் மூலமாக அசரீரியாக ஒலித்த பெருமாள், தன் பக்தனான ஆஞ்சநேயரை தனக்கு அருகில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார்.
அதன்படி ஆஞ்சநேயர் சிலையை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். தற்போதும் ஆஞ்சநேயரை, மூலஸ்தானத்தில் சுவாமிக்கு அருகில் தரிசிக்கலாம். இவர் சுவாமியின் பாதத்தைவிட, உயரம் குறைவானவராக காட்சி தருவது விசேஷம். இவருக்காக அமைக்கப்பட்ட சன்னதி, பிரகாரத்தில்இருக்கிறது. அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.
ஆஞ்சநேயர், சூரிய புத்திரன் என்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம். சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார். பிரகாரத்தில் மகிழ மரத்தின் கீழ் சிவலிங்கம், நாகர் இருக்கின்றனர். சிவனுக்குரிய மகிழ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.
சிறப்புகள்.....
தீராத நோய், வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள் தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர். பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், நோய் நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள்.
திருமணத்தடை உள்ள பெண்கள் பெருமாளுக்கும், ஆண்கள் ஸ்ரீதேவிக்கும் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். நிலம் தொடர்பான பிரச்னை நீங்க, பூமாதேவிக்கு செவ்வாய் கிழமைகளில், செவ்வாய் ஓரை நேரத்தில் குங்கும அர்ச்சனை செய்து, அதை தங்களது நிலத்தில் தூவி வேண்டிக் கொள்கிறார்கள்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்....
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு ஆலந்துறையார் கோவில்
» அருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில்-கோனேரிராஜபுரம்
» அருள்மிகு பத்ரிநாத் கோவில்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum