தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு

Go down

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு Empty அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு

Post  meenu Fri Jan 18, 2013 12:22 pm

இந்த கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்;இறைவி பாகம்பிரியாள்.இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 அடி உயரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் மட்டுமே செல்ல முடியும்.

மேலும் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவோர் படிகட்டுகள் மூலம் செல்லலாம். இந்த கோவிலுக்கு 1200 படிகட்டுகள் கொண்ட நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒய்வு எடுத்துவிட்டுச் செல்ல வசதியாக பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.அதில் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இங்கு படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் (பார்வதி தேவி) காட்சி அளிப்பதே ஆகும்.

இந்த கோவிலில் மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கிறார்.

புனித தீர்த்தங்கள்::::

தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இவற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் , குமார தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம்,கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம்,மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் ஆகும்.

இந்த தீர்த்தங்கள் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தேவதீர்த்தம் தான் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

மேலும் அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்திருத்தலத்தி உள்ள முருகனைப் பற்றி அழகாக பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதியில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு மிக சிறந்த வரலாற்று சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

இங்குள்ள நாகர் சந்நிதியில் வழிப்பட்டால் நாக தோஷங்கள் நீங்குவதற்காக பக்தர்கள் நம்புகின்றனர்.எனவே அதிக அளவில் இங்கு பக்தர்கள் வ‌ந்து வழிபடுவார்கள்.

போக்குவரத்து வசதி:::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் சென்று பின் அங்கிருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று பின் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum