தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூமாத்தம்மன் கோவில்

Go down

பூமாத்தம்மன் கோவில் Empty பூமாத்தம்மன் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 10:25 pm

ஸ்தல வரலாறு...

தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் புராதன வரலாற்றுச் சின்னங்களோடு சில மறைவிடங்களில் அமைந்து பக்தர்களின் கண்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. அம்மன் வழிபாடு தொடங்கும் இத்தருணத் தில் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள மாமண்டூர் வடபாதி என்ற புண்ணிய பூமியில் பூமாத்தம்மன் என்ற சக்தியுள்ள அம்மன் கோவிலைப்பற்றி தெரிந்து தரிசித்து வருவோமா?

அம்பிகையை தட்சிணாமூர்த்தி ரூபிணி என்று ஆதிசங்கரர் வர்ணித்துப்பாடியிருப்பதை எல்லோரும் அறிவோம். இங்கே அம்பிகை பூமாத்தம்மன் குருவடிவில் அமர்ந்து சேவை சாதிக்கிறாள்.

வலது கையில் சூலமும், கீழ்க்கையில் அபயமுத்திரையும், இட மேல் கையில் பாசமும், அதன் கீழ்க்கையில் பிரம்ம கபாலமும் கொண்டு இடது விழிமேல் நோக்கியவாறும், வலது விழி பூமியை நோக்கியபடியும் ஒருகாதில் குழந்தையை குண்டலமாகவும், இடப்புறக்காதில் மகர குண்டலமும் அணிந்தபடி பிரம்ம கபாலமும் கொண்டு விளங்குகிறாள். பூமாத்தம்மன் சன்னதி முன் எவர் வணங்கி நின்றாலும் தன் திருமேனியிலிருந்து பூவிழச்செய்து அருள்கிறாள் தேவி.

ஆலயத்தில் உள்ள தல வரலாறு ஒரு புராணக்கதையைக் கூறுகிறது. திருக்கயிலாயத்தில் சிவபெருமான் ஒரு நாள் தனியே உலாவிக்கொண்டிருந்த போது பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்களைப் பொத்திவிட உலகமே இருண்டு விடுகையில் பூவுலகில் சில காலம் தன்னைக் குறித்து தவம் செய்யும்படியும் பிறகு தக்க சமயத்தில் ஆட்கொள்வதாகவும் தண்டனை அறிவிக்கிறார் ஈசன்.

தன்னுடைய 7 தோழியர்களுடன் சேர்ந்து கீழுள்ள பூமிக்கு வந்த தேவி திருக்கடிகை ஆற்றின் அருகே பிராம்மி, மகேஸ்வரி, வராகி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டிவுடன் வடபாதி மலர்வனத்தில் வந்து தங்குகிறாள். ஒரு நாள் தான் அமைத்த மலர்வனத்தில் கௌமாரியைக் காவல் வைத்து விட்டுத் திருக்கயிலாயம் செல்ல அச்சமயம் இரண்டு கந்தர்வர்கள் கௌமாரியை மயங்கச் செய்து மலர்வனத்தை நாசம் செய்தனர்.

திரும்பி வந்த தேவி கந்தர்வர்களை அழித்து தென்பாதி வனம் விட்டு வடபகுதி மலர் சோலையில் அமர்ந்தார். இதனால் வடபாதி என்ற பெயர் வந்தது. ஆடி வெள்ளியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது.

பிரதி அமாவாசை அன்று பிரத்யங்கிரா தேவிக்கு முன் உள்ள யாகமேடையில் பக்தர்கள் நலனுக்காக நிகும்பலா யாகம் நடத்தப்படுகிறது. பௌணர்மியில் கௌரி மங்கள பூஜை நடைபெறுகிறது. பூமாத்தம்மன் முன் அவளது விருத்தம்பாட கருவில் குழந்தை மலரும் என்பது நம்பிக்கை. ஒரு முறை தரிசித்து வருவீர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum