தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொருளாதாரம் மேம்பட வைக்கும் பூமாத்தம்மன்

Go down

பொருளாதாரம் மேம்பட வைக்கும் பூமாத்தம்மன் Empty பொருளாதாரம் மேம்பட வைக்கும் பூமாத்தம்மன்

Post  amma Fri Jan 11, 2013 1:13 pm

‘சக்தி வாய்ந்த அம்பிகையின் சந்நிதானங்கள் அருகிலேயே இருந்தாலும்
அதற்கென்று நேரம் வரும்போதுதான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கி றது!’ -
இது பூமாத்தம்மன் கோயிலைப் பற்றி அறிந்து அங்கு சென்று அன்னையை
முதன்முதலாக வணங்கும் பக்தரின் ஞானோதயம்! ஆமாம், தின மும் ஆயிரக்கணக்கில்
வாகனங்கள் கடந்து போகும் பிரதான சாலைக்கு அருகிலேயே அப்படிப்பட்ட சக்தியின்
தலமொன்று உள்ளது. ஆம், மாமண் டூர் அரசுப் பேருந்துகள் வந்து நின்று
இளைப்பாறும் மைதானத்தின் அருகிலேயே பூமாத்தம்மன் அருளாட்சி செய்து
கொண்டிருக்கிறாள். இந்த ஆல யத்தின் அற்புதமே பக்தர்களில் யாரேனும் ஒருவர்
வெகுநேரம் நின்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், தன் திருமேனியிலிருந்து
பூவை விழச் செய்கிறாள். இப்படி பூவை விழச் செய்து அருள் வழங்குவதாலேயே
பூமாத்தாள் என்று அழைக்கப்பட்டாள்.

இந்த அம்மனைப் பற்றி கடந்த
நூற்றாண்டில் வாழ்ந்த மகான் கந்தசாமி சித்தர் என்பவர் ‘பூமாது தில்லைப்
பூமாது’ என்று ஆரம்பித்து 108 விருத்தங் களை ஓலைச் சுவடியில், 1880ம்
ஆண்டிலேயே எழுதி வைத்துள்ளார். அந்தச் சுவடிகளும் எழுத்தாணியும் இன்னும்
சந்நதியிலேயே வைத்துப் பாது காக்கப்பட்டு வருகின்றன. தேவியைப் பற்றிய
பூமாது தாலாட்டும் பூமாத்தம்மன் விருத்தப் பாடல்களும் விசேஷ தினங்களில்
வழிபாட்டுப் பாடல்களாக பாடப்படுகின்றன. பூமாதின் புகழ் கூறும் புராணக்
கதையை பார்ப்போமா? ஒரு சமயம் சிவபெருமான் கயிலையின் மலர் வனத்தில் நடந்து
கொண்டிருந்தார். உமாதேவியார் அவரது இரண்டு கண்களையும் பொத்திவிட, ஈசன் ஒரு
கணம் தடுமாறினார். உலகமனைத்தும் இருள் மயமாயிற்று.

ஈசன் கடும்
கோபம் கொண்டார். ‘‘தேவி, நீ விளையாடுவதற்கு நான்தான் கிடைத்தேனா! உன்னால்
உலக ஜீவராசிகள் சில நிமிடங்களுக்கு துன்பப் பட நேர்ந்ததே. இதற்கு
பிராயச்சித்தமாக பூலோகம் செல். அங்கு திரக்கடிகை ஆற்றங்கரைக்கு
(தற்காலத்தில் கெடிலம்) வடப் பாகத்தில் ஒரு காத தூரமுள்ள மலர் வனத்தில்
தவமும் விரதமும் மேற்கொள். தக்க தருணம் வரும்போது நான் உன்னை ஆட்கொள்வேன்’’
என்றார். இதைக்கேட்டு மனம் கலங்கிய தேவி எல்லாம் இறைவனின்
திருவிளையாடல்தான். ஏதோ ஒரு நன்மையை உத்தேசித்துதான் இவை நடக்கின்றன எ ன்று
தெளிவானாள். தன் சித்தத்தை சிவன்பால் வைத்து மலர்வனத்தை அடைந்தாள்.
உடன்வந்த சப்த மாதர்களோடு சிவ பூஜையைத் தொடர்ந்தாள். சில மாதங்களில்
பங்குனி உத்திரத் திருநாள் வந்தது. இறைவனைத் திருக்கல்யாணம் புரிய, தன்
தோழிகளில் கௌமாரியை மட்டும் மலர் வனத்தில் காவல் வைத்துவிட்டு,
மற்றவர்களோடு கயிலையை அடைந்தாள்.

இதுபோன்ற சமயத்துக்காகக்
காத்திருந்த இரண்டு கந்தர்வர்கள், மலர்வனம் வந்து காவலிருந்த கௌமாரியை
மயக்கமுறச் செய்தனர். மணமுள்ள மலர்களை பறித்துச் சென்றனர். திருக்கயிலையில்
திருமணம் முடித்து மலர் வனத்துக்குத் திரும்பிய தேவியும் மற்ற
தோழியர்களும் கௌமாரி மயங்கிக் கிடப்பதையும் மலர்வனம் அலங்கோலமாக காட்சி
தருவதையும் பார்த்து திடுக்கிட்டனர். அவளை மயக்கம் தெளியச் செய்து
விவரத்தைக் கேட்டறிந்தனர்.
தேவி தனது ஞான திருஷ்டியால் கந்தர்வர்கள்
இருக்குமிடத்தை அறிந்து தன் வாக்கினாலேயே தீ ஜுவாலையை அனுப்பி இருவரையும்
சம்ஹாரம் செய்தாள். பிறகு, தென்பக்க மலர்வனம் காய்ந்திருப்பதை அறிந்து
வடபாகத்திலேயே சப்த மாதர்களோடு அமர்ந்தாள். இப்படியாக பராசக்தியே சர்வா பரண
பூஷிதையாக இங்கு கோயில் கொண்டருளினாள்.

ஆலய நுழைவாயிலில் அரசும்
வேம்பும் சேர்ந்தபடி மங்களகரமாக நம்மை வரவேற்கின்றன. இந்த வழிபாட்டு
மேடையைச் சுற்றிலும் அஷ்ட நாகர் களும் காவல் நிற்கின்றனர். அடுத்ததாக விஜய
கணபதியும் நாகலிங்கேஸ்வரர் சந்நதியும் அதனுள் ஒரு பாகத்தில் ஒரே கல்லால் ஆன
நாகராஜரும் உள்ளனர். இந்த விசேஷ நாகராஜனை வழிபடுவதால் காலசர்ப்ப தோஷங்கள்
தீருகின்றன. கோயில் திருச்சுற்றில் இரண்டாவதாக அங்காள பரமேஸ்வரி
சந்நதியும் நவகிரக பீடமும் அமைந்துள்ளன. தொடர்ந்து சென்றால், ஷீரடி
சாய்பாபா, து வாரகமயி பாபா, நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான், சப்த
மாதர்கள், லட்சுமி நரசிம்ம பெருமாள், பிரத்யட்ச மந்திர வராகி, மகா
பிரத்யங்கரா தேவி, இவருக்கு எதிரே நிகும்பலா யாக குண்டம் எனக்
காணமுடியும்.

இந்த திருச்சுற்றின் வரிசையில் பக்த ஆஞ்சநேயர்,
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா, அதர் வண பத்ரகாளி, உக்ர பிரத்யங்கிரா தேவி,
அபிராமி அம்பாள் சமேத சர்ப்ப லிங்கேஸ்வரர், பாலமுருகன், பால கணேஸ்வரர்,
அகத்தியர், ரேணுகா பரமேஸ்வரி என்று தேவலோகமே பூமிக்கு இறங்கியதுபோல்
அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றை நிறைவு செய்து
மூலஸ்தானத்திற்குள் நுழையும்போது அர்த்த மண்டபம் சாந்தத்தை மனதுள் கொண்டு
வருகிறது. அங்கே முதல் வணக் கக் கடவுளாக பாலாற்று வெள்ளத்தில் ஒதுங்கிய ஞான
சக்தி கணபதியைக் காணலாம். அடுத்ததாக, வடக்கே திருமுகம் காட்டும் தீப
துர்க்கா தேவி யும் ஐந்து தலை நாகராஜ மூர்த்தியும் வள்ளி-தெய்வானை சமேதராக
செல்வ முத்துக்குமார சுவாமியும் இவர்களது வலப்பாகத்தில் பாம்பன்
சுவாமிகளும் இடப் பக்கத்தில் அருணகிரிநாதரும் உள்ளார்கள்.

சந்நதிக்கு
எதிரிலேயே காவல் தெய்வமாக கருப்பண்ண சுவாமியும் சூல சக்தியும்
வீற்றிருக்க, கருவறை அர்த்த மண்டபத் தில் பல்லவர் காலக் கட்டிடக் கலை
நுட்பத்தை எடுத்துச் சொல்லுகிற இரண்டு தீப நாச்சியார்களும் உள்ளனர்.
மூலஸ்தானத்தில் தேவி பூமாத்தம்மன் பத்ம பீடத்தில் அமர்ந்து ஜொலிக்கிறாள்.
ஆதிசங்கரர் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகையை தட்சிணாமூர் த்தி ரூபிணி என
வர்ணித்திருப்பார். இத்தலத்தில் அம்பிகை சாட்சாத் தட்சிணாமூர்த்தியின்
அருட்கோலத்திலேயே காட்சி தருகிறாள். ஒரு காதில் குழந்தையை குண்டலமாகவும்
இடது காதில் மகர குண்டலமும் கொண்டு, பூணூலை அணிந்தபடி பிரம்ம தேஜோ
ரூபிணியாகக் காட்சி அளிக்கிறாள். சிரசு, அக்னி ஜுவாலை போன்றும் நான்கு
திருக்கரங்களோடு வலக்கையில் சூலமும் கீழ்க் கரத்தில் அபய முத்திரையும் இடது
புறக்கையில் பாசமும் கீழ்கையில் கபாலத்தோடும் காட்சி தருகிறாள்.

அம்பிகையின்
நான்கு கரங்கள், தான் வேதங்களின் உருவம் என்பதை உணர்த்துவதாகவும் தேவி
வழிபாட்டு நூல்கள் சொல்கின்றன. கால சர்ப்ப தோஷங்கள் நீங்கிட வெள்ளி,
செவ்வாய், பௌர்ணமி நாட்களில் அரச மர மேடையிலுள்ள அஷ்ட நாகங்களுக்கு
தீபங்கள் ஏற்றிய பிறகு பூமாத்தம்மன் தாலாட்டைப் பாடி, குங்கும அர்ச்சனை
செய்ய வேண்டும். பௌர்ணமி அன்று பூமாதுவின் தாலாட்டு மற்றும் விருத்தத்தைப்
பாடி தீபம் ஏற்றினால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.
பொருளாதாரம் உயர்நிலை பெறவும் தொழிலில் வளர்ச்சியைக் காணவும் பக்தர்கள்
யாவரும் அமாவாசையன்று மாலை நடைபெறும் விசேஷ நிகும்பலா யாகத்தில் கலந்து
கொள்வது வழக்கமாக உள்ளது.

காஞ்சி மடத்தை அலங்கரித்த மகா பெரியவர்
ஒருமுறை இத்தலம் வழியாக சென்றபோது அம்பிகையை தரிசித்து, சக்தி யந்திரம்
தந்து, அதை சாரதா நவராத்திரியில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார்; அப்படியே
செய்து வைத்திருக்கிறார்கள். சென்னை-திண்டிவனம் சாலையில்,
மாமண்டூரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் மாமண்டூர்-வடபாதி மங்கலம் தலம்
உள்ளது. செங்கல்பட்டைச் சுற்றி நான்கு வடபாதிமங்கலம் உள்ளதால் இந்த
தலத்திற்கு ‘மாமண்டூர் வடபாதி மங்கலம்’ என்று கேட்டுச் செல்ல வேண்டும்.
ஆலயத் தொடர்புக்கு:
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum