முக்கிய சிவ தலங்கள்
Page 1 of 1
முக்கிய சிவ தலங்கள்
* அவினாசி :கோவையில் இருந்து திருப்பூர் வரும் வழியில் 40-வது கிலோ மீட்டரில் அவினாசி அருள்மிகு அவிநாசியப்பர் ஆலயம் உள்ளது. சுந்தரர் சிறுவன் ஒருவனை முதலை வாயில் இருந்து மீட்ட திருத்தலம். இங்கு வழிபட தேள்கடி குணமாகும். அம்பிகை தவம் செய்த திருத்தலம். அவினாசி எனக் கேட்க முக்தி உண்டாகும் என்ற பெயர் பெற்றிருக்கிறது.
* திருவானைக்காவல்: திருச்சிக்கு வடக்கே ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேசுவரர் ஆலயம் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் இது நீர்த்தலம். மூலஸ்தானத்தில் எப்போதும் நீர் தேங்கியிருக்கும் 70-க்கும் மேற்பட்ட மாடக்கோவில்கள் கட்டிய சோழன் கோச்செங்கண்ணான் சென்ற பிறவியில் சிலந்தியாய் வழிபட்ட தலமாகும். உச்சிக்காலத்தில் தேவியே சிவபெருமானை பூஜிக்கும் தலமாகும். இறைவன் அளித்த திருநீற்றையே கூலியாகப் பெற்று பக்தர்கள் எழுப்பிய, நெடிய நீளமான பிரகாரம் உள்ள தலமாகும். இங்கு வழிபட வாழ்வு மேன்மை பெறும்.
* திருவாரூர்: ஸ்ரீதியாகராஜஸ்வாமி திருக்கோவில் தஞ்சைக் கிழக்கே நாகை வழியில் 43-வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பிறக்க முக்தி உண்டு. மாலை பூஜை தேவேந்திரனே செய்வதாக மரபு. எல்லா ஆலய சாந்நித்யமும் ஒன்று சேர்ந்து சிறப்புப் பெற்ற ஸ்தலம் இது. அர்ச்சகர் தலைப்பாகை அணிந்து பூஜை செய்யும் தனித்தன்மை கொண்ட ஆலயம். சன்னிதிகள் நிறைய உடைய கோவில், சப்தலிங்கத் தலத்தில் ஒன்றாகும்.
* சிதலைப்பதி: ஸ்ரீமுக்தீஸ்வரர் ஆலயம் நன்னிலம்- பேரளத்துக் கிடையில் பூந்தோட்டம் ரயில் நிலையத்துக்கு மேற்கே 1 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. தசரதருக்கும், சடாயுவுக்க ராமலட்சுமர்கள் மூல தர்ப்பணம் செய்திட்ட தலமாகும். சந்திரன் பூஜித்த பதி, மூதாதையர்க்கு கிரியைகள் செய்ய சிறந்த தலம்.
* வேதாரண்யம்: ஸ்ரீவேதாரண்யநாதர் ஆலயம் வேதங்கள் வழிபட்ட பதி. தேவாரங்கள் வேதங்கள் போன்று சிறப்பானவை என்பதை நிரூபிக்க வேதங் களால் அடைபட்ட கதவுகள் அகன்ற பதி. அகத்தியர் சிவனாரின் திருமணக் காட்சி கண்ட பதிகளில் ஒன்று. தீப நெய்யை உண்ண வந்த எலி, தீபத்தைத் தூண்டி விட்ட புண்ணியத்தால் மற பிறவியில் மாவலிச் சக்ர வர்த்தி யாக பிறக்கும் பேறு பெற்ற தலம். இது சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» முக்கிய சிவ தலங்கள்
» பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள்
» சென்னை சிவ தலங்கள்
» தசரா தலங்கள்
» நவகிரக தலங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum