முக்கிய சிவ தலங்கள்
Page 1 of 1
முக்கிய சிவ தலங்கள்
மயிலாப்பூர்.........
பார்வதிதேவி சிவபெருமானை மயில் உருவம் கொண்டு வழிபட்ட தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம். எலும்பை உயிர் கொண்ட பெண்ணாக்கிய தலமாகும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயினார் அவதரித்த இடம். 63 நாயன்மார்களின் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு வழிபட நினைத்தது நடக்கும்.
திருவான்மியூர்.........
இங்குள்ள தலத்தின் பெயர் மருந்தீஸ்வரர் ஆலயம். வால்மீகிக்கு சிவபெருமான் நடனக்காட்சி காண்பித்த தலமாகும். அகத்தியர் மூலிகை ஞானம் பெற்ற இடமாகும். காமதேனு வழிபட்ட தலம். தேவர்கள் அமுதத்தால் லிங்கம் உருவாக்கி வணங்கிய தலம். இங்கு ஈசனை வழிபட்டால் உடல் நலம் பெறலாம்.
திருவொற்றியூர்...........
இங்குள்ள ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி ஆலயம் பட்டினத்தார் முக்தி பெற்ற தலமாகும். கலியநாயனர் திருவிளக்கேற்றி சிவபதியடைந்த தலமாகும். வள்ளலார் வழிபட்ட இடம் சுந்தரமூர்த்தியார் சங்கிலியாரை திருமணம் புரிந்திட்ட திருத்தலமாகும். இங்கு வழிபட மனம் பக்குவம் பெறும். திருமணம் கைகூடும். தோஷங்கள் நீங்கும்.
பாடி........
இங்கு திருவல்லீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவ அபராதம் செய்தவனுக்கு கருங்குருவி ஆகுமாறு ஏற்பட்ட சாபம் அகன்ற தலமாகும். பரத்வாஜர், அனுமார், பிரஹஸ்பதி முதலியோர் வழிபட்ட பெருமை வாய்ந்த ஸ்தலமாகும். குரு பரிகார தலம். குரு பெயர்ச்சி பரிகார பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. சிவனுக்கு எத்தனையோ சிறப்பான கோவில்கள் உலகம் முழுவதும் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அப்படி சிறப்பு வாய்ந்த சில கோவில்கள் சென்னையிலும் இருக்கின்றன.
திருவேட்டீஸ்வரர், திருவல்லிக்கேணி........
கோவிலுக்குள் நுழையும் முன் ராஜகோபுரத்தை நிமிர்ந்து பார்த்தால் ஆச்சரியத்தால் கண்கள் அகல விரியும். கோபுரத்தின் இடது பக்கத்தில், கீழே ஒரு முகமதியர் சிற்பம், பக்கத்தில், லிங்கத்தின் மீது பால் சொரியும் ஒரு பசு, பலநூறு வருடங்களுக்கு முன் திருவேட்டீஸ்வரனை லிங்க ரூபமாகக் கண்டெடுத்தவர் ஒரு முகமதியர் தானாம். இன்றும் கூட இரவு அர்த்தஜாம பூஜை நிவேதனத்துக்காக ஆற்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு குடும்பத்திலிருந்து தினமும் இரவு 9 மணிக்கு பசும்பால் வந்து விடுகிறதாம். அழகிய பெரிய கோவில், நந்தவனம், தெப்பக்குளம் என்று கண்களுக்கும் மனதுக்கும் குளுமை பரப்பும் சிங்காரக் கோவிலாக இது உள்ளது.
வெள்ளீஸ்வரர், மயிலாப்பூர்.........
மாவலி சக்கரவர்த்தியின் ஈகை பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வாமனர் அவனை அழித்து விடப் போகிறாரே என்று பரிதவித்த குரு சுக்கிராச்சார்யார் வண்டாய் உருவெடுத்து தாரை வார்க்கும் கிண்டியின் மூக்குப் பகுதியை அடைத்துக் கொள்கிறார். இதைக் காணும் வாமனர் ஒரு குச்சியால் கிண்டித் துளையைக் குத்த சுக்ராச்சார்யார் கண்ணை இழக்கிறார். மயிலைக்கு வந்து சிவபெருமானை வேண்ட அவர் அருளால் மீண்டும் பார்வை பெறுகிறார். சுக்கிரனுக்கு பார்வை அளித்த இறைவன் வெள்ளீஸ்வரன்.
ஈஸ்வரன் தவிர இத்தலத்தின் மற்றுமோர் சிறப்பு சரபேஸ்வரர் சன்னதி. இரண்யனை அழித்த நரசிம்மரின் உக்கரத்தைக் தணித்ததாகக் கூறப்படும் இவரை ஞாயிறு ராகு காலத்தில் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வெள்ளீஸ்வரர் அருளால் தீர்க்கமான கண்பார்வை பெறுவதோடு, கண் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் சுலபமாய் சிகிச்சை முடித்து பார்வை பெறுகிறார்களாம்.
காரணீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை........
எந்தக் காரணத்திற்காகவும் இந்த ஈசனை வந்து வணங்கினால் அந்தக் காரணம் எல்லாம் கனிவாக நிறைவேறும். அதனாலேயே இந்த ஈஸ்வரன், காரணீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பிகை சொர்ணாம்பிகை. தூண்களிலும், சுவர்களிலும் காரணீஸ்வரர் கருவறை மேல் விதானத்திலும் அநேக மீன் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து இக்கோயில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.
கமிகா ஆகமப்படி இக்கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் போது எட்டாம் நாள் அன்று நடத்தப்படும் திருஞான சம்பந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும். குறிப்பாக கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அக்காட்சியைக் காண்பதால் பிறக்கும் குழந்தை கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் என்று நம்புகிறார்கள்

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» முக்கிய சிவ தலங்கள்
» பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள்
» சென்னை சிவ தலங்கள்
» தசரா தலங்கள்
» நவகிரக தலங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum