சென்னையில் ஆஞ்சநேயர் கோவில்கள்
Page 1 of 1
சென்னையில் ஆஞ்சநேயர் கோவில்கள்
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் நங்கநல்லூரில் 32 அடி உயரத்தில் "ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி'' என்ற பெயருடன் ஆஞ்சநேயர் எழுந்தளியுள்ளார். இவருக்கு சாற்றப்படும் வடை மாலை மிகச் சிறப்புடையது.
இந்த வடை மாலைக்கு ஆறாயிரம் வடைகள் தயார் செய்யப்பட்டு மாலையாக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயம்: மைலாப்பூர் லஸ் முனையிலிருந்து சமஸ் கிருதக் கல்லூரிக்குப் போகும் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. எந்த ஒரு செயலையும் இவரை வணங்கிவிட்டு ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
மூதறிஞர் ராஜாஜி தான் எழுதிய `சக்ரவர்த்தித் திருமகன்' என்ற ராமாயண நூலின் முதல் பிரதியை இங்குள்ள வீர ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து வேண்டிக் கொண்டுதான் வெளியிட்டார். திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர்: திருவல்லிக்கேணி குளத்தின் கீழ்கரையில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இவர் முதலில் மேல் கரையில் இருந்துள்ளார். அவரை வணங்கும் பக்தர்களை இந்த ஆஞ்சநேயர் சக்தி உள்ளவர் என்று சொல்வதெல்லாம் வதந்தி என்று சிலர் கேலி செய்துள்ளனர்.
தான் சக்தி உடையவர் என்பதை அனைவருக்கும் உணர்த்த அவர் கீழ்கரையில் எழுந்தருளினார். அவருடைய மகிமை தெரிந்து அனைவரும் அவரை வழி படுகின்றனர்.
ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்: ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் எழுந்தருளி உள்ள ஆஞ்சநேயர் மகா வரப்ரசாதி. நினைத்ததை நடத்தி வைப்பவர். வேண்டியதைக் கொடுப்பவர். எடுத்த காரியங்களைத் தொடர்ந்து நடத்திட நல்ல மனவலிமையைக் கொடுப்பவர் இவர்.
வடபழனி ஆஞ்சநேயர்: வடபழனியில் பழனி யாண்டவர் கோவிலில் சுவாமி சந்நிதிக்கு எதிரில் தனி சந்நிதி கொண்டு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
மயிலாப்பூர் ஆஞ்சநேயர்: மயிலாப்பூர் குளத்தருகில் உள்ள அலமேலு மங்கா புரத்தில் 18 அடி உயர பக்த ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார். வேண்டியது நிறைவேறியதும் இவருக்கு சிரசிலிருந்து பாதம் வரை துளசி மாலை சாற்றுவது வழக்கம்.
வளசரவாக்கம் ஆஞ்சநேயர்: வளசரவாக்கத்தில் எழுந் தருளியுள்ள ஆஞ்சநேயரிடம் தேங்காய் கட்டி தங்களுடைய பிரார்த்தனைகளை செய்து கொள்கிறார்கள். தங்களது வேண்டுதல்களை ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொண்டு ஆலயத்திலேயே தேங்காய் வாங்கி சந்நிதியை ஒன்பது முறை வலம் வந்து தேங்காயை அவர் பாதத்தில் வைத்து எடுத்து அதற்காக உள்ள இடத்தில் கட்டி வருகின்றனர். ஒரு வாரம் சென்று தாங்கள் கட்டிய தேங்காயை ஆஞ்சநேயருக்கு நிவேதித்து வீட்டிற்குக் கொண்டு வந்து அதைக்கொண்டு ஏதாவது ஒரு இனிப்பு செய்து சாப்பிடுவது வழக்கம்.
ஒரு வார காலத்திற்குள் வேண்டிக் கொண்டது நிச்சயம் பலிக்கும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» சரசுவதி கோவில்கள்........
» சரசுவதி கோவில்கள்........
» இந்துக் கோவில்கள்
» கேரளத்துக் கோவில்கள்
» சரசுவதி கோவில்கள்........
» சரசுவதி கோவில்கள்........
» இந்துக் கோவில்கள்
» கேரளத்துக் கோவில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum